இன்று 65வது ஆண்டை நிறைவு செய்தது சுதந்திர கட்சி. ( ஒரு பார்வை)



மறைந்த SWRD பண்டாரநாயக்க அவர்களின் தலைமையின் கீழ் 1951ம் ஆண்டு செப்டெம்பர் இரண்டாம் திகதி சுதந்திர கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாகவே அரசியல் கால் பதித்தார். மேலும் கட்சியின் தலைவர்களான சந்திரிகா பண்ரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக கடமையாற்றினார்கள்.

ஏ.ராஜபக்ஷ, எச்.நிஷங்க, தயா பத்திரன, டி.பி.இலங்கரட்ன, மைத்திரிபால சேனாநாயக்க, ஏ.பி.ஜயசூரிய,  ஆகியோரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்தார்கள். சமகால தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 40 வருடங்களாக கட்சியின் அங்கத்தவராக செயற்படுவதுடன், 13 வருடங்களாக பொதுச் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை குருணாகல் மாளிகாபிட்டியில் இடம்பெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவார்.

H B றிஸ்வானுஸ் ஸமான்   02/09/2016   கொழும்பு.
இன்று 65வது ஆண்டை நிறைவு செய்தது சுதந்திர கட்சி. ( ஒரு பார்வை) இன்று 65வது ஆண்டை நிறைவு செய்தது சுதந்திர கட்சி. ( ஒரு பார்வை) Reviewed by Madawala News on 9/02/2016 10:24:00 AM Rating: 5