Accaddemy

கைது செய்யப்பட்டுள்ள 7 பேருக்கும் தடுப்பு காவலில் விசாரணை. நீதிமன்றம் இன்று உத்தரவு.



கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த செல்வந்தரான வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படடுள்ள சந்தேக நபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேக நபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு இன்று அனுமதி வழங்கினார்.

இதனடிப்படையில், சுலைமான் கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேக நபர்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் சேதவத்த மற்றும் கிரேண்ட்பாஸ் பிரதேசத்தினை சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் சிக்கியுள்ளது.


வர்த்தகர் மொஹமட் சுலைமான், பம்பலபிட்டி – கொதலாவல எவன்யூவில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு அருகில் இருந்து கடந்த மாதம் 21 ஆம் திகதி அதிகாலை கடத்தப்பட்டு,  மாவனெல்ல, ஹெம்மாதகம பிரதேசத்தில் இருந்து கடந்த 25ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள 7 பேருக்கும் தடுப்பு காவலில் விசாரணை. நீதிமன்றம் இன்று உத்தரவு. கைது செய்யப்பட்டுள்ள 7 பேருக்கும்  தடுப்பு காவலில் விசாரணை. நீதிமன்றம் இன்று உத்தரவு. Reviewed by Madawala News on 9/02/2016 02:39:00 PM Rating: 5