tg travels

( படங்கள்) 700 பேர் கலந்து கொண்ட மர்ஹூம் எம்.எச். எம் அஷ்ரப் அல்குர்ஆன் ஓதல் போட்டி.(அஷ்ரப் ஏ சமத்)

முஸ்லீம் காங்கிரஸ் ஸ்தபாகத் தலைவர் மர்ஹூம் எம்.எச். எம் அஷ்ரபின் 16வது ஆண்டு மறைவு தினம் நேற்று (செப்டம்பர் 16) கொழும்பு -07 நெலும் பொக்குன மாநாட்டு மண்டபத்தில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. 

அஷ்ரப் அல் குர் ஆன் ஆராய்ச்சி அகடமியினால்  அழகிய தொனியில் அல்குர்ஆனை ஓதி வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு 8 கிராம் தங்கமும், 50 ஆயிரம் ருபா பணப்பரிசிலும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது. 

இப்போட்டியில் பல்வேறு வயது மட்டத்தில் 700 பேர் கலந்து தெரிவு செய்யப்பட்டவர்களது குர் ஆன் ஓதுதல் மேடையில் ஓதினார்கள்.

இந் நிகழ்வுக்கு ஜக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, பாக்கிஸ்தான், பலஸ்தீன் நாட்டின் தூதுவர்களும் வெளிநாட்டு குர்ஆன் மனன காரிகளும் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் பிரதியமைச்சர்கள் பைசால் காசீம், எச்.எம். ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பிணர்கள் கட்சியின் உயர் பீட உறுப்பிணர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

மர்ஹூம் அஸ்ரப் பற்றி கட்டார்நாட்டின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டீன் முஹம்மத் உரையாற்றினார்.

மறைந்த தலைவர் அஷ்ரப்       இந்த நாட்டு முஸ்லீம்களுக்கு  ஓர்    அரசியல் முகவரியைப்    பெற்றுத்   தந்த  மாமனிதர் அவர் தலைவர் மட்டுமல்ல அவர் ஒர் அறிஞர் ஞானி   இஸ்லாமிய மத பக்தர், அவர் மரணிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நான் பாக்கிஸ்தான் பல்கலைக்கழகத்தில் சேவையாற்றிக் கொண்டிருக்கும்போது   என்னைத் தொடர்புகொண்டு  ஒர்  இஸ்லாமிய  தனியானதொரு பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கு என்னோடு பேசினார்.அதற்காக அட்டாளைச்சேனையில் ஒரு காணியையும் அடையாளப்படுத்தியிருந்தார்.அத்துடன் இஸ்லாமிய சரியா, மற்றும்  மத்தரசா குர் மற்றும் முஸ்லீம் மத காலச்சாரம் கொண்டதொரு  பல்கலைக்கழக பாடத்திட்டம் வரைபுகளைக் கூட தயார்படுத்தச் சொன்னார்.ஆனால் ஒரு மாதத்திற்குள் அவர் மறைந்து விட்டார்.அன்று அப் பல்கலைக்கழகம் அமையப்பெற்று இருந்தால் இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்கள் தற்காலத்தில் நிலவும்     தப்பிப்பிராயங்கள் ஏற்பட்டிருக்காது.

அவர் அடிக்கடி ஏனைய மதத் தலைவர்களை அழைத்து இன மத நல்லிணக்கங்களை பரிமாறக்கூடிய ஒரு கவுன்சிலையும் அமைத்திருந்தார்.அவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யபட்ட கல்வி, மத கலாச்சாரங்களை தவிர்த்து  நாம் இந்த நாட்டில் பிறந்தவர்கள் தமக்கென்றுதொரு கலை ,கலாச்சாரம், அடையாளம் சொந்தமாக இருக்க வேண்டும். என சிந்தித்தார்.

அவர் இந்த நாட்டில் உள்ள  குர்ஆண்பாடசாலைகளில்  இருந்து உருவாக்கும்  கல்வியை மாற்றி  உலகில் நல்ல சிறந்த இஸ்லாமிய அறிஞர் களை உருவாக்குவதற்கே அவர் சிந்தித்தார்.அவரின் ஒவ்வொரு சிந்தனை புதுமையானது,   அவர் சுயநலம் பாராது இந்த நாடு மக்கள்  சமுகம் என்றே  சிந்தித்தார்.அவர் மறைந்து இன்றுடன்   16 வருடங்கள் அவர் பற்றி சிந்திக்கின்றோம். 

ஆனால் இந்த நாட்டில் மட்டுமல்ல  உலகில் எத்தனையோ தலைவர்கள் கட்சிகள்  தோன்றி மறைகின்றன  தலைவர்களும்  மறைந்துள்ளார்கள்.  ஆனால்   இந்த தலைவர் அஷ்ரபை பற்றி  தொடர்ந்து இந்த நாட்டில் சிந்தித்து அவர் பற்றிய நினைவுகள் அவர் செய்த நன்மைகள் அவர் எடுத்த முயற்சிகள் பற்றி நாம் இன்றும் சிந்திக்கின்றோம். இனிவரும் காலத்தில் சிந்திப்போம்.  அவரது என்ணக்கருக்களை நாம்  முன்னெடுத்துச் செல்ல  வேண்டும். என பேராசிரியார் தீன் முஹமத் கண்னீர் சிந்திய நிலையில் அங்கு உரையாற்றினார்.

( படங்கள்) 700 பேர் கலந்து கொண்ட மர்ஹூம் எம்.எச். எம் அஷ்ரப் அல்குர்ஆன் ஓதல் போட்டி. ( படங்கள்)  700 பேர் கலந்து கொண்ட மர்ஹூம் எம்.எச். எம் அஷ்ரப் அல்குர்ஆன் ஓதல் போட்டி. Reviewed by Madawala News on 9/17/2016 11:56:00 AM Rating: 5