Oceas

ஐ. தே.கவின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதியின் உரை இதுதான்.



அன்று 70 ஆண்டுகளுக்கு முன்னர் 1946ம் ஆண்டு சிங்கள, முஸ்லிம், தமிழ், பேர்கர் என அனைத்து இன மக்களும் ஒரே இனமாக இருக்க வேண்டும் என்று டீ.எஸ். சேனாநாயக்க கூறியதை இன்று நாமும் கூற வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றி ஜனாதிபதி இவ்வாறு கூறியதுடன், மேலும் உரையாற்றும் போது,

நாங்கள் பிரச்சினைகளின் ஆழம் பற்றி இணம் காண வேண்டும். நாங்கள் புத்தியுடனும் முதிர்ச்சியுடனும் பிரச்சினைகளை நோக்கி பார்க்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 62 இலட்சத்து 50,000 பேர் எமக்கு வாக்களுத்தது நாம் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளுக்காகவே என்றும், அவற்றை நிறைவேற்றுவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற எமது ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் 65வது ஆண்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனைகளும், இன்று இங்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையே.

ஆகவே இரு கட்சிகளினதும் யோசனைகளில் ஒற்றுமை இருக்கிறது. இருகட்சிகளுடைய ஒற்றுமையான ஒரே யோசனையை கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம் என்றும் ஜனாதிபதி இங்கு கூறினார்.

நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து இனத்தவர்களுக்கும் பொருந்தக் கூடியவாறான புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அர்ப்பனிப்புடன் செயற்படுவோம்.

சில ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறது. ஆகவே பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்த வேண்டாம் என்று நான் ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் ஜனாதிபதி கூறினார்.
ஐ. தே.கவின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதியின் உரை இதுதான். ஐ. தே.கவின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வில்  ஜனாதிபதியின் உரை இதுதான். Reviewed by Madawala News on 9/10/2016 02:38:00 PM Rating: 5