Accaddemy

சாம்சுங் நோட் 7 மொபைலை பயன்படுத்த கட்டுநாயக்க விமான நிலையமும் தடை விதித்தது.



விமானப் பயணங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 (Samsung Galaxy Note 7) மொபைல்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி அறிந்ததே..

சாம்சங் நிறுவனம் இம்மாதம் தொடக்கத்தில் கேலக்ஸி நோட் 7 என்ற புதிய கைபேசியை அறிமுகம் செய்தது. இதனை பயன்படுத்திய அமெரிக்க மற்றும் கொரிய வாடிக்கையாளர்கள், இந்த கைபேசி சார்ஜ் போட்டால் வெடித்து சிதறுவதாக 37 பேர் புகார் தெரிவித்திருந்தனர்.

இவ்விவகாரம் சமூக வலைதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்திருந்த சாம்சங் நிறுவனம், தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட பேட்டரியை பயன்படுத்தும் கேலக்ஸி நோட் 7 கைபேசிகள் மட்டும் வெடித்து சிதறுவதாக கூறி, பாதிப்படைந்த வாடிக்கையாளர்களுக்கு புதிய கைபேசி வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தது.


இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 போனின் பேட்டரி எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதால், அதனை விமானப் பயணத்தின் போது பயன்படுத்த இலங்கை, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட சில நாடுகள் தடை விதித்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறிப்பிட்ட தொலைபேசியை விமான பயணிகள் பாவிக்க வேண்டாம் என நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளதை கீழுள்ள படத்தில் காணலாம்.

14344368_1240916852626849_5324130906409472504_n

சாம்சுங் நோட் 7 மொபைலை பயன்படுத்த கட்டுநாயக்க விமான நிலையமும் தடை விதித்தது. சாம்சுங் நோட் 7 மொபைலை பயன்படுத்த கட்டுநாயக்க விமான நிலையமும் தடை விதித்தது. Reviewed by Madawala News on 9/15/2016 01:55:00 PM Rating: 5