நியுயோர்க் நகரம் உறங்கிய நாள்.



செப்டம்பர் 11. வருடத்துக்கு ஒருமுறை வந்துபோம் ஒரு நாள் என்பதைத் தாண்டி உலக மக்கள் மனதில் இருந்து நீங்காத ஒரு கறும்புள்ளியைப்  பதியவிட்டுச் சென்றுள்ள நாள் தான் இந்த செப்டெம்பர் 11.

உலகை உலுக்கிய சம்மபவங்களில் முக்கியமான ஒன்றாகவே இது உள்ளது. சுமார் 2993 உயிர்களை ஒரு சில நிமிடங்களில் பறித்துச்சென்ற ஒரு கறுப்பு நாள்.

நியுயோர்க் நகரம் சற்றும் எதிர்பார்த்திராத ஒரு அடி. நான்கு விமானங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தீவிரவாத  இயக்கம் முதலில் உலக வர்த்தகமையக் கோபுரத்தைத் தாக்கியது,  என்ன நடந்தது என்று திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த இருதாக்குதல்களும் இடம் பெற்றன.

கடத்தப்பட்ட விமானங்களில் இருந்த சுமார் 246 பயணிகளுடன், மொத்மாக சுமார் 2993 உயிர்கள் கொல்லப்பட்டன. நியுயோர்க்  நகரத்திற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் அது ஒரு பேரதிர்ச்சியாகவே இருந்தது.

அடுத்த ஒரு மணிநேரத்தில் அமெரிக்க அரசு, அத்தாக்குதலுக்கு  அல்கைதா இயக்கமே காரணம் என்று அறிக்கை விட்டது.

செப்டெம்பர் தாக்குதல் முற்றுமுழுதாக அல்கைதாவின் முயற்சியா,  இல்லை அமெரிக்காவின் உள்கூத்தா என்பது ஒரு பெரிய தலைப்புதான். சம்பவத்தின் பின்னரான ஆராய்ச்சிகளின் படி பல சந்தேகத்துக்குறிய  விடயங்கள் கண்டறியப்பட்டு அறிக்கையிடப்பட்டமை அறிந்ததே.

அல்கைதாவின் தாக்குதலோ, அமெரிக்காவின் நாடகமோ எதுவாக இருந்தாலும் நாம் இழந்த அந்த 2993 உயிர்களுக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. அந்த ஆத்மாக்களுக்கு நம்மால் முடிந்தது  பிரார்த்தனை ஒன்று மட்டுமே...                      
                                                                        - நுகாரயான் -
நியுயோர்க் நகரம் உறங்கிய நாள். நியுயோர்க் நகரம் உறங்கிய நாள். Reviewed by Madawala News on 9/11/2016 10:09:00 AM Rating: 5