Free Space

உன்னத அவசர வைத்திய சேவை - 999 ( எம் .வை .இர்பானின் அனுபவம்)



உன்னத அவசர வைத்திய சேவை - 999

நேற்றிரவு  11 மணியளவில்   என்னுடன் இருக்கும் நண்பருக்கு இடைவிடாத இருமலும் நெஞ்சு  வலியினால் துடித்தார் உடனே 999 என்கிற ஹமாத் வைத்திய சாலை அவசர அம்புலன்ஸ் வண்டிக்கு கைத் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினேன் உடனே மறு முனையிலிருந்து மறு கணமே பதில் வந்தது நோயாளியின் நிலை பற்றியும் வீட்டு விலாசத்தையும் கேடடார்கள்.

ஒன்றுக்கும் கவலைப் பட வேண்டம் அம்புலன்ஸை அனுப்புகிறோம் கனிவான வார்த்தைகளில் பதிலளித்தது மனதை ஆறுதல் படுத்தும்

வெளியே வந்து வீட்டுக்கு முன்னால் சுவரில்  பொருத்தப்பட்டுள்ள தகவல்களை சொன்னேன் மறு நொடியில்  வெளியில் அம்புலன்சின் ஒலி கேட்டது ஐந்து நிமிடத்திற்குள் வாசல் படியில்  அம்புலன்சும் வைத்தியரும் வந்தது வியப்பாகவும் மகிழச்சியாகவும் இருந்தது.

நோயாளியை வண்டிக்குள் ஏற்றி பத்து நிமிடங்கள்  ஆரம்ப சிசிச்சைகளை செய்து பின்னர் ஹமாத் வைத்திய சாலைக்கு கொண்டு  சென்றனர்

ஹமாத் வைத்திய சேவை பாராட்டுக்குரியது.

கொழும்பு போன்ற நகரங்களில் தனியார் வைத்திய சாலைகள் 24  மணி நேர அவசர அம்புலன்ஸ வசதியுள்ளது

நமது ஊர்களில் இத்தகைய அவசர சேவைகள் எதுவும் கிடையாது
என்றொரு ஏக்கம் என் மனதிற்குள்

அவசரத்திற்கு நடு நிசியில் நோயாளியை வைத்திய சாலைக்கு கொண்டு செல்வற்கு வாகனத்தை தேட வேண்டிய அவல நிலை நமது ஊர்களிலுள்ளது.

ஒரு ஓட்டோ வைத்திருக்கும் ஒரு நண்பருடன் கதைக்கும் போது  சொன்னார் தனது கைத் தொலைபேசியை இரவு  பத்து மணிக்கும் பிறகும் நிறுத்தி வைப்பதில்லை என்று கூறினார்  எதற்கு என வினவிய போது ஒரு தாயின் பிரசவத்திற்கு எந்த வேளையும் வைத்திய சாலை செல்வதற்கு  அவசர அழைப்பு வரலாம் என்பதாக  காரணம் சொன்னார்.

நமது ஊர்களிலும்  இத்தகைய அவசர அம்புலன்ஸ சேவையை வைத்திய சாலைகள்  ஆரம்பித்தால் நிச்சயம் எல்லா மக்களும் நன்மையடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

எம் .வை .இர்பானின் அனுபவம்....
உன்னத அவசர வைத்திய சேவை - 999 ( எம் .வை .இர்பானின் அனுபவம்) உன்னத அவசர வைத்திய சேவை - 999 ( எம் .வை .இர்பானின் அனுபவம்) Reviewed by Madawala News on 9/14/2016 10:35:00 PM Rating: 5