Oceas

அரசாங்கம் நிவாரணம் வழங்க கொடுத்த நிதியில் இளம் குடும்பப் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம்.



அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள வௌ்ள நிவாரணத்தை வழங்குவதற்காக 24 வயது இளம் குடும்பப் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியதோடு, அவரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வனாத்தவில்லு பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட 41 வயதான கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட அதிக மழை காரணமாக காலஓய ஆறு பெருக்கெடுத்தமையால் ஏற்பட்ட வௌ்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கவே அவர் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் வௌ்ள பாதிப்பு குறித்து ஆராய வீட்டுக்கு வந்திருந்த வேளையே தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்டதாக குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் நிவாரணம் வழங்க கொடுத்த நிதியில் இளம் குடும்பப் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம். அரசாங்கம்  நிவாரணம் வழங்க கொடுத்த நிதியில் இளம் குடும்பப் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம். Reviewed by Madawala News on 9/21/2016 09:04:00 AM Rating: 5