Accaddemy

ராஜகிரியவில் விபத்து... ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.



-ஏ.எஸ்.எம்.இர்ஷாத்

ராஜகிரியவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - பஸ் விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் அந்த இடத்தில் பலியானார்.

இவ்விபத்து இன்று புதன்கிழமை(28) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பஸ் ஊழியர்களை பத்தரமுல்லையிலுள்ள காரியாலத்திற்கு ஏற்றிக்கொண்டு சென்றபோதே ராஜகிரிய பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றது.

இதனால் அப்பிரதேசத்தில் வாகனப்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

தற்போது விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 விபத்து சம்பவம் குறித்து ராஜகிரிய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பற்றிய விபரம் இது வரை தெரியவில்லை.
ராஜகிரியவில் விபத்து... ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி. ராஜகிரியவில் விபத்து... ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி. Reviewed by Madawala News on 9/28/2016 12:10:00 PM Rating: 5