Ad Space Available here

சிங்களவர், முஸ்லிம், தமிழர் என்ற வேறுபாடுகளையும் தாண்டி நாம் ஒன்று பட்டதாலே இன்று வெற்றியை அனுபவிக்கிறோம்.நாச்சியாதீவு பர்வீன்.

சிறந்த தந்தை ஒருவரினாலேயே தலை சிறந்த பிள்ளைகளை உருவாக்க முடியும். அவ்வாறே சிறந்த தலைவன் ஒருவனால் மாத்திரமே நல்லதொரு ஆட்சியை வழங்க முடியும். நமது நாட்டுக்கு நல்லதொரு தலைவன் கிடைத்துள்ளார். அந்தத் தலைவர் சிறுபான்மை இன மக்களின் ஒற்றுமையின் நிமித்தம் நமக்கு கிடைத்த அளப்பெரிய பரிசாகும்.

சிங்களவர்,முஸ்லிம்,தமிழர் என்ற வேறுபாடுகளையும் தாண்டி நாம் ஒன்று பட்டதன் விளைவே அந்த வெற்றி. இப்போது நாம் அனுபவிக்கும் இவ்வாறான சந்தோசமான நேரங்களை அந்த வெற்றி நமக்கு தந்துள்ளது. என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். கால் நடை உற்பத்தி மற்றும் விவசாய திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்திய தேசிய உணவு உற்பத்தி பொருட் கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதியமைச்சர் அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்

தேசிய நெல் உற்பத்தியில் சுமார் 27 சதவீதத்தை இந்த அம்பாறை மாவட்டம் வழங்குகிறது. இந்த மொத்த உற்பத்தியினை இன்னும் அதிகரிக்க விவசாயிகள் முன்வரவேண்டும். நமது நாட்டுக்கு தேவையான பிரதான உணவாக அரிசி விளங்குகிறது. இது அனுராதபுரம்,பொலன்றுவை,குருநாகல் போன்ற பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்பட்டாலும் இந்த அம்பாறை மாவட்டத்திலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதும், அது தேசிய நுகர்வுக்கு பாரிய பங்களிப்பினை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறைகளில் இருந்து மீண்டுவர வேண்டும்.

அது காலத்தின் கட்டாயமாகும். இன்றைய நவீன உலகம் மாற்றங்களுக்கூடாகவே நகர்கிறது. எல்லாத்துறையிலும் புதிய அனுகு முறைகள்,புதிய தொழில்நுட்பங்கள்,இலாபம் தருகின்ற புதிய வழி முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவ்வாறே விவசாயத்திலும் புதிய முயற்களை இந்த்பிரதேசத்து விவசாயிகள் கையாள வேண்டும்.இதன் மூலம் நமது தேசிய உற்பத்தியில் எதிர்காலத்தில் தன்னிறைவான தேசமாக உறுவாக முடியும்.
இந்தப்பிரதேசத்தில் நெல் உற்பத்தி மாத்திரமன்றி கரும்புச் செய்கையும்,சேனைப்பயிரச்செய்கையையும் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறு பயிர் செய்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த உற்பத்திகளின் மூலம் போசணை நிறைந்த தன்னிறைவான ஒரு நாட்டினை நாம் உறுவாக்க முடியும். கெளரவ அமைச்சர் தயா கமகே அவர்கள் இந்த நிகழ்வை இந்த மாவட்டத்தில் நடாத்த அரும்பாடு பட்டார். நமது உள்நாட்டு உற்பத்திகளை நாம் ஊக்குவிக்கும் நோக்கிலும்,நமது உற்பத்திகளையே நுகர்வோர் அதிகம் பயன்படுத்தும் வகையிலும் இவ்வாறான நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இந்த நல்லாட்சி அரசு நடாத்துகிறது.

எமது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு,விவசாய அமைச்சு,கால்நடைகள் அபிவிருத்தி அமைச்சு போன்றன விவசாயிகளின் விடயத்தில் அக்கரையுடனும்,அவதானத்துடனும் செயல்பட்டு வருகின்றன. கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது பற்றியும்,அவர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை முன்மொழிவது தொடர்பிலும் தீவிரமாக செயலாற்றுகின்றன.

அந்த வகையில் ஒரு நல்லாட்சி அரசின் சொந்தக்காரர்களாகிய நாம் ஒரு சுபீட்சமான,போசாக்கிலும்,உள்நாட்டு உற்பத்திலும் தன்னிறைவான நாடக நமது நாட்டினை கட்டி எழுப்புவதற்கு திடசங்கற்பம் பூணுவோம். எனக்கூறினார். இதன்போது பயனாளர்கள் பலருக்கு உதவித் தொகையும் , உபகரணங்களும்  பிரதியமைச்சரினால்  வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெற்றோலியவளத்துறை பிரதி அமைச்சர் திருமதி அனோமா கமகே அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் அமீர் அலி ,  அமைச்சின் அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்
சிங்களவர், முஸ்லிம், தமிழர் என்ற வேறுபாடுகளையும் தாண்டி நாம் ஒன்று பட்டதாலே இன்று வெற்றியை அனுபவிக்கிறோம். சிங்களவர்,  முஸ்லிம்,  தமிழர்  என்ற  வேறுபாடுகளையும் தாண்டி நாம் ஒன்று பட்டதாலே இன்று வெற்றியை அனுபவிக்கிறோம். Reviewed by Madawala News on 9/01/2016 08:58:00 AM Rating: 5