Free Space

"இராணுவக்கட்சி உருவாக்கி தேர்தலில் போட்டியிடுவோம்".. உருவாகிறது புதிய கட்சி.



(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஆட்­சிக்கு வந்த எந்த அர­சாங்­கமும் இரா­ணு­வத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. எதிர்­வரும் தேர்­தல்­களில் தேசிய இரா­ணுவக் கட்சி ஒன்றை உரு­வாக்கி போட்­டி­யி­ட­வுள்ளோம் என மேஜர் அஜித் பிர­சன்ன தெரி­வித்தார். தாய் நாட்­டுக்­காக இரா­ணு­வத்­தினர் அமைப்பு நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், நாட்­டுக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் சேவை­செய்யும் இரா­ணு­வத்­தி­னரின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு ஆட்­சிக்கு வந்த எந்த அர­சாங்­கமும் நட­வ­டிக்கை எடுத்­த­தில்லை.

ஆனால் இரா­ணு­வத்தை பாது­காப்­ப­தா­கவும் அவர்­க­ளுக்கு தேவை­யான அனைத்து நட­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­வ­தா­கவும் தெரி­வித்தே ஆட்­சிக்கு வரு­கின்­றன. தற்­போது இந்த அர­சாங்­கத்தில் இரா­ணுவத்­தினர் சிறை­யி­ல­டைக்­கப்­ப­டு­கின்­றனர்.

அண்­மை­யிலும் மன்­னாரில் இராணுவ வீரர்­கள் சிலர் கைது­செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்­ளனர். அதே­போன்று எக்­னெ­லி­கொட வழக்கில் புல­னாய்வு துறை­யைச்­சேர்ந்த 9பேர் கைது­செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டனர்.

கடந்த அர­சாங்க காலத்தில் அமைச்­ச­ராக இருந்த மேவின் சில்­வாவின் மகன் மாலக சில்வா இரா­ணுவ வீரர் ஒருவர் மீது தாக்­குதல் மேற்­கொண்டார்.

அப்­போது இன்று இரா­ணு­வத்­தி­ன­ருக்­காக கூக்­குரல் இடும் உதய கம்­மன்­பில, விமல் வீர­வன்ச, பந்­துல குண­வர்த்­தன போன்­ற­வர்கள் இதற்­காக வாய்­தி­றக்­க­வில்லை. தற்­போது பந்­துல குண­வர்த்­தன இரா­ணுவ வீரர் ஒரு­வரை பிணையில் எடுப்­ப­தற்­காக 20லட்சம் ரூபா பணம் சேக­ரித்­துள்ளார். அதனை நாங்கள் வர­வேற்­கின்றோம்.

ஆனால் புல­னாய்வுத் துறை­யைச்­சேர்ந்த இரா­ணுவ வீரர்கள் சிறையில் இருக்­கும்­போது நலன் விசா­ரிப்­ப­தற்கு கூட இவர்கள் செல்­ல­வில்லை.

வீர­வன்ச மற்றும் உதய கம்­மன்­பில போன்­ற­வர்கள் இரா­ணுவ வீரர்கள் தொடர்பில் மேடை­களில் பேசு­வ­தெல்லாம் அவர்களின் சுய அர­சியல் நோக்­கத்­திற்­காவே என்றார்.

"இராணுவக்கட்சி உருவாக்கி தேர்தலில் போட்டியிடுவோம்".. உருவாகிறது புதிய கட்சி. "இராணுவக்கட்சி உருவாக்கி தேர்தலில் போட்டியிடுவோம்".. உருவாகிறது புதிய கட்சி. Reviewed by Madawala News on 9/28/2016 11:10:00 AM Rating: 5