ஏறாவூர் தாயும் மகளும் கொலையில் ஒருவர் கைது.



மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் தாயான  நூர் முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்  கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டன.

சனிக்கிழமை (10) நள்ளிரவு வேளையில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது,  இவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்து பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று முன்தினம் இரவு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் தாயும் மகளும் கொலையில் ஒருவர் கைது. ஏறாவூர் தாயும் மகளும் கொலையில் ஒருவர் கைது. Reviewed by Madawala News on 9/15/2016 11:52:00 AM Rating: 5