Accaddemy

"நான் தாக்கியது எனது சொந்த மகளை தான்". கைதான தாய் வாக்குமூலம். சிறுமி கொடூரமாக தாக்கபட்ட சம்பவத்தின் அப்டேட்ஸ்.



(பாறுக் ஷிஹான்)

யாழ்ப்­பாணம் நீர்­வேலி பகு­தியில் சிறு­மியை தாக்­கிய சம்­பவத்­துடன் தொடர்­பு­டைய தாயை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு யாழ். நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

யாழ்ப்­பாணம் நீர்­வேலி பகு­தியில் வீடொன்றில் பெண் ஒருவர் சிறு­மியை தாக்கும் காணொ­ளியை அய­ல­வ­ரான சிவ­கரன் வெளி­யிட்டார். பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் இக்­கா­ணொ­ளியை பகிர்ந்­தி­ருந்­தனர்.

இதை­ய­டுத்து சம்­பவம் தொடர்பில் கோப்பாய் பிர­தேச செய­லக சிறுவர் நன்­ன­டத்தை பிரி­வி­ன­ருக்கும்  கோப் பாய் பொலி­ஸா­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டது.

அதனை தொடர்ந்து சிறுவர் நன்­ன­டத்தை பிரிவு அதி­காரி கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­த­த­னை­ய­டுத்து  தாக்­குதல் மேற்­கொண்ட பெண்ணை கோப்பாய் பொலிஸார் கைது செய்­தனர்.

இந்­நி­லையில், குறித்த பெண்ணை பொலிஸார் கடந்த  வெள்­ளிக்­கி­ழமை   யாழ். நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­செய்த போது அவரை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு பதில் நீதிவான் க. அரு­மை­நா­யகம் உத்­த­ர­விட்டார்.

3 பிள்­ளை­க­ளையும் சிறுவர் இல்­லத்தில் ஒப்­ப­டைக்­கு­மாறும் இவர்களின் தந்தை தொடர்­பான விபரங்களை ஆராய்ந்து விசா­ரணை செய்­யு­மாறும் நீதிவான் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

இந்­நி­லையில் பேஸ்புக் சமூ­க­ வ­லைத்­த­ளத்தில் பதி­வேற்­றப்­பட்­டி­ருந்த காணொ­ளியின் உண்மைத் தன்மை, சிறு­மியைத் தாக்­கப் ­ப­யன்­ப­டுத்­திய கத்தி தொடர்­பான உண்மைத் தன்மை ஆகி­ய­வற்றை உறு­திப்­ப­டுத்த அவற்றை மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அனுப்பி வைக்­கு­மாறும் நீதிவான் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

இதே­வேளை, பாதிக்­கப்­பட்ட சிறுமி சார்­பாக 6 சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கி­ய­துடன் குறித்த பெண் அச்­சி­றுமியின்  தாயில்­லை­யெ­னவும் தெரி­வித்­தனர்.

ஆனால் சம்­ப­வத்­துடன் கைது­ செய்து விளக்­க­ம­றி­யலில் வைக்கப்பட்டுள்ள தாய் குறித்த சிறுமி தனது சொந்த மகள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பதில் நீதிவான் இது தொடர்பிலும் ஆராயுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"நான் தாக்கியது எனது சொந்த மகளை தான்". கைதான தாய் வாக்குமூலம். சிறுமி கொடூரமாக தாக்கபட்ட சம்பவத்தின் அப்டேட்ஸ். "நான் தாக்கியது எனது சொந்த மகளை தான்". கைதான தாய் வாக்குமூலம்.  சிறுமி கொடூரமாக தாக்கபட்ட சம்பவத்தின் அப்டேட்ஸ். Reviewed by Madawala News on 9/26/2016 10:07:00 AM Rating: 5