Free Space

(ஓடியோ இணைப்பு) ஹஜ் கோட்டா விவகாரம் !நல்லாட்சி மீதும் அமைச்சர் ஹலீம் மீதும் அசாத் சாலி பாய்ச்சல் ...



நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தான் வெட்கப்படுவதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு இணைய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில்..


கடந்த 2010 இல் இலங்கைக்கு 6000 க்கும் அதிகமான ஹஜ் கோட்டங்கள் கிடைத்ததாகவும் கடந்த இரண்டு வருடங்களாக 3000 க்கும் குறைவான ஹஜ் கோட்டாக்களே சவுதி அரேபிய அரசு இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.இந்த விடயம்  முஸ்லீம் விவகார அமைச்சரின் இயலாமையை காட்டுகிறது.

முன்னதாக முஸ்லீம் விவகார அமைச்சர் நியமிக்கப்பட்ட போது பிரதமரிடம் ஒரு முஸ்லீமை அந்த பதவிக்கு நியமிக்கும் படி நான் வேண்டினேன்.தற்போதய முஸ்லீம் விவகார அமைச்சரை ஒரு முஸ்லீமாக ணாம் கருதவில்லை விஷேடமான நான் கருதவில்லை.முஸ்லீம் விவகார அமைச்சை வழி நடத்துவர் முஸ்லீங்கள் தொடர்பில் மதம் தொடர்பில் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

அண்மையில் நாம் பாதுகாப்பு செயலாளரை சந்தித்த போது பெளத்த விவகார அமைச்சுடன் முஸ்லீம் விவகார அமைச்சு இருந்திருந்தால்  இதை விட நன்றாக செயற்பட்டிருக்கும் என குறிப்பிட்டார்.இது முஸ்லீம் விவகார அமைச்சின் இயலாமையை எடுத்துக்காட்டுகிறது.

இம்முறை இலங்கைக்கு 2240 வீசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.கடந்த முறை வழங்கப்பட்ட 600 மேலதிக வீசாக்களும் இம்முறை கிடைக்கவில்லை.கடந்த வருடம் 600 வீசாக்கள் கிடைத்த போது அதை பெற்றுக்கொள்ள யாரும் இருக்கவில்லை. அமைச்சருன் அவரது சகோதரரும் முண்டியடித்துக்கொண்டு சவுதி அரேபியா சென்றுவிட்டனர். இம்முறையும் பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் இங்கிலாந்து சென்றுவிட்டார்.

சவுதியுடன் நல்லுறவை பேணியிருந்தால் இப்படி ஆகியிருக்காது. 3 லட்சம் பேர் இருக்கும் மாலைதீவுக்கு ,வங்க தேசத்துக்கு மேலதிக வீசா வழங்கப்பட்ட போதும் இலங்கைக்கு மேலதிக வீசா வழங்கப்படவில்லை.அதனை பெற்றுக்கொள்ளும் முறை இவர்களுக்கு தெரியவில்லை.

இம்முறை 8000 பேர் ஹஜ் செல்ல விண்ணப்பித்துள்ள போதும் இந்த நல்லாட்சி அரசில் ஜனாதிபதியும் பிரதமரும் அவர்களுக்கு வாய்ப்பை பெற்றுக்கொடுக்க எதுவித நடவடிக்கையையும்  எடுக்கவில்லை.இந்த விடயத்தை கண்டுகொள்ள இன்று யாருக்கும் நேரம் இல்லை.அனைவரும் ஊழல் செய்வதில் மிக மிக பிஸியாக உள்ளனர்.

மஹிந்த அணியினர் உட்கார்ந்த இடத்தில் இருந்து களவெடுத்தார்கள் இவர்கள் ஓடி ஓடி களவெடுக்கிறார்கள். இவர்களுடன் எமக்கு பயணம் ஒன்று செல்லமுடியாது என்பது தற்போது நன்கு தெளிவாகியுள்ளது.

மஹிந்தவின் மோசமான செயற்பாடுகளால் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் அவரிடம் இதைவிட வேளைகளை செய்திருக்க முடியும்.

இது தொடர்பில் இப்போது நாம் மன வேதனை அடைகிறோம் என அவர் குறிப்பிட்டார் .

கொழும்பு இணைய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வி ...


(ஓடியோ இணைப்பு) ஹஜ் கோட்டா விவகாரம் !நல்லாட்சி மீதும் அமைச்சர் ஹலீம் மீதும் அசாத் சாலி பாய்ச்சல் ... (ஓடியோ இணைப்பு) ஹஜ் கோட்டா விவகாரம் !நல்லாட்சி மீதும் அமைச்சர் ஹலீம் மீதும் அசாத் சாலி பாய்ச்சல் ... Reviewed by Madawala News on 9/02/2016 03:32:00 PM Rating: 5