Yahya

இந்த ஆட்சியிலும் தொடரும் பாரதூரமான இனவாத நடவடிக்கைகளுக்கு ஒரு சாம்பிள் ...''குளி­யா­ப்பிட்­டியின் மும்­மானை எனும் பகு­தியில் முஸ்­லிம்­க­ளது வியா­பா­ரத்தை முடக்க அழ­கான ஒரு வேலைத் திட்­டத்தை நாம் முன்­னெ­டுத்தோம். ஒரு வரு­டமே அந்த திட்­டத்தை அமுல் செய்தோம். நான்கு இளை­ஞர்­களே களத்தில் இறங்­கினர். ஐந்து, ஆறு ஊர்கள் ஒன்று சேர்ந்­தன. அந்த திட்டம் மிக்க வெற்­றியை தந்­தது.

இன்று முஸ்லிம் வர்த்­த­கர்கள் மூக்கால் அழு­கின்­றனர். இதே வேலைத்­திட்­டத்தை நாம் ஏனைய பகு­தி­க­ளிலும் முன்­னெ­டுத்தால் பாரிய வெற்­றியைக் காணலாம்''

இப்­படிச் சொன்­னவர் வேறு யாரு­மல்ல. நீங்கள் நினைப்­பது போல பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்தான்.

கடந்த பல மாதங்­க­ளாக தான் அமை­தி­யாக இருப்­ப­தாக காட்டிக் கொண்­டாலும் ஆர­வா­ர­மின்றி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மறை­முக வேலைத்­திட்­டங்­களை தேரர் முன்­னெ­டுத்து வரு­கிறார் என்­ப­தற்கு இந்தக் கருத்­துக்கள் சிறந்த உதா­ர­ண­மாகும்.

சில வாரங்­க­ளுக்கு முன்னர் கொரி­யா­வுக்கு விஜயம் செய்த அவர் அங்கு வாழும் இலங்கை பௌத்­தர்கள் சில­ருடன் இர­க­சிய சந்­திப்பு ஒன்றை நடத்­தி­யி­ருந்தார். இந்த சந்­திப்பில் அவர் பகிர்ந்து கொண்ட தக­வல்கள் குரு­நாகல் மாவட்­டத்தில் அமைந்­துள்ள மும்­மானை எனும் முஸ்லிம் கிரா­மத்­துடன் தொடர்­பு­டைய விட­ய­மாகும்.

தேரர் குறிப்­பிட்­டுள்­ளது போல மும்­மானை கிராம முஸ்­லிம்கள் கடந்த பல மாதங்­க­ளாக பாரிய இன ரீதி­யான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் ஒடுக்­கு­மு­றைக்கும் முகங்­கொ­டுத்து வரு­கி­றார்கள். மும்­மானை முஸ்லிம் கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­திற்குச் சொந்­த­மான காணியை விடு­வித்து பொது விளை­யாட்டு மைதா­ன­மாக மாற்ற வேண்டும் என்­பதே இப் பிர­தேச பெரும்­பான்மை இன­வாத சக்­தி­களின் கோரிக்­கை­யாகும்.

இந்த மும்­மானை கிராமம் குரு­நாகல் மாவட்­டத்தின் கடு­கம்­பள தேர்தல் தொகு­தியில் கிரி­யுள்ள பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட பகு­தியில் அமைந்­துள்­ளது.

குறித்த மும்­மானை கனிஷ்ட முஸ்லிம் வித்­தி­யா­லயம் 1962 ஆம் ஆண்டு குரு­நாகல், தம்­ப­தெ­னிய, மும்­மானை மஸ்­ஜிதுர் ரஹ்­மா­னியா ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான மைய­வாடிக் காணியில் அமைக்­கப்­பட்­டது.

1970 ஆம் ஆண்டு பிர­தேச தன­வந்தர் ஒருவர் இப் பாட­சா­லைக்­கென ஒரு ஏக்கர் காணியை அன்­ப­ளிப்­பாக வழங்­கினார். 1978 ஆம் ஆண்டு இக் காணியை அர­சு­டை­மை­யாக சுவீ­க­ரித்து பாட­சா­லைக்குச் சொந்­த­மாக வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. எனினும் அக் காலப்­ப­கு­தியில் இதற்­கென முன்­னெ­டுக்­கப்­பட்ட சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கைகள் இது­வரை முழு­மை­யாக முற்றுப் பெற­வில்லை.

இருந்த போதிலும் கடந்த 40 வரு­டங்­க­ளுக்கும் மேலாக இக் காணி பாட­சாலை விளை­யாட்டு மைதா­ன­மா­கவே பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.
இந்­நி­லை­யில்தான் மும்­மானை மற்றும் அதனை அண்­டி­யுள்ள கிரா­மங்­களைச் சேர்ந்த பெரும்­பான்மை இனக் குழு­வொன்று பாட­சா­லைக்­கு­ரிய மைதானக் காணியை பொதுக் காணி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு கோரிக்கை விடுத்து வரு­கி­றது.


இதற்கு பாட­சாலை நிர்­வா­கமும் பிர­தேச முஸ்­லிம்­களும் மறுப்புத் தெரி­வித்­ததைத் தொடர்ந்தே அப் பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத பிர­சா­ரங்­களை தூண்­டி­விட்­டுள்­ள­துடன் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்குச் செல்லும் பெரும்­பான்மை இனத்­த­வர்­களை வீடு தேடிச் சென்று அச்­சு­றுத்தி வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


இந்த திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­காக 'பொது தேபல சுர­கிமே ஜனதா எக­மு­துவ' எனும் பெயரில் உள்ளூர் அமைப்­பொன்று ஸ்தாபிக்­கப்­பட்­டி­ருந்­தது. இவ் அமைப்­பினர் பிர­தேசம் எங்கும் சுவ­ரொட்­டி­களை ஒட்­டியும் துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை விநி­யோ­கித்தும் மும்­மானை பாட­சாலை விளை­யாட்டு மைதானக் காணி விவ­கா­ரத்தை மக்கள் மயப்­ப­டுத்­தினர். பின்னர் வியா­பா­ரத்தை பகிஷ்­க­ரிக்கும் கோரிக்­கை­களை முன்­வைத்­தனர்.


எனினும் இதன் பின்­ன­ணியில் அப் பகு­தியைச் சேர்ந்த சிறு குழு­வொன்றே உள்­ள­தா­கவே பல­ராலும் சந்­தே­கிக்­கப்­பட்­டது. ஆனால் இந்த விடயம் ஒரு வருட காலத்­திற்கு முன்­னரே பொது பல சேனா அமை­ப்­பி­னால் திட்­ட­மி­டப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­பது ஞான­சார தேரர் கொரி­யாவில் வெளி­யிட்­டுள்ள கருத்­துக்கள் மூல­மாக வெட்ட வெளிச்­ச­மா­கி­யுள்­ளது.


2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­துடன் இந்த நாட்டு முஸ்­லிம்கள் நிம்­மதிப் பெரு­மூச்சு விட்­டனர். தாம் கடந்த சில வரு­டங்­க­ளாக முகங்­கொ­டுத்த இன­வாத, மாத­வாத அச்­சு­றுத்­தல்கள் நீங்­கி­விட்­ட­தாக நம்­பினர். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்த நல்­லாட்சி அர­சாங்கம் சிறு­பான்மை இனங்­களின் உணர்­வு­களைப் புரிந்து கொண்டு செயற்­படும், இன­வா­தி­களின் கொட்­டத்தை சட்­டத்தின் மூலம் அடக்கும் என்றும் முஸ்­லிம்கள் எதிர்­பார்த்­தனர்.

அத­னால்தான் ஜனா­தி­பதித் தேர்­தலில் பெரு­மெ­டுப்பில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஆத­ர­வ­ளித்­தனர்.


ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக ஆட்சி மாறி­னாலும் காட்­சிகள் மாற­வில்லை என்­பது போன்றே கடந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் தலை­யெ­டுத்த முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத நட­வ­டிக்­கைகள் இந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்­திலும் ஆங்­காங்கே இடம்­பெற்ற வண்­ண­மே­யுள்­ளன. இதற்கு பல உதா­ர­ணங்­களை இங்கு முன்­வைக்க முடியும்.

கொழும்பில் தெஹி­வளை பாத்­தியா மாவத்தை பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு பொலி­சாரின் ஆத­ர­வுடன் பிர­தேச பௌத்த விகா­ரா­தி­பதி தலை­மை­யி­லான குழு­வினர் தொட­ராக தடை­வி­தித்து வரு­வ­துடன் அச்­சு­றுத்­தலும் விடுத்து வரு­கின்­றனர். இந்த விட­யத்தை சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பிர­தமர் ஆகி­யோரின் கவ­னத்­திற்குக் கொண்டு சென்ற போதிலும் இது­வரை தீரவு வழங்­கப்­ப­ட­வில்லை.

கண்டி நகரில் அமைந்­துள்ள லைன் ஜும்ஆ பள்­ளி­வா­சலின் மினாரா கட்­டிட பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்ட சமயம் அதற்­கெ­தி­ராக சிங்­ஹலே அமைப்­பினர் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை நடத்­தி­ய­துடன் குறித்த மினா­ரா­வா­னது தலதா மாளி­கையின் கூரையை விட உயர்த்திக் கட்­டப்­ப­டு­வ­தாக பொய்க் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர். இந்த எதிர்ப்பு கார­ண­மாக பள்­ளி­வாசல் நிர்­வாகம் மினாரா கட்­டு­மானப் பணி­களை தொடர்ந்தும் இடை­நி­றுத்தி வைத்­துள்­ளது.
சில மாதங்­க­ளுக்கு முன்னர் மஹி­யங்­கனை பிர­தே­சத்தில் முஸ்லிம் இளை­ஞர்கள் சிலர் பௌத்த கொடியை எரித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி மஹி­யங்­க­னைக்கு விஜயம் செய்த ஞானா­சார தேரர் '' மஹி­யங்­கனை இன்­னு­மொரு அளுத்­க­ம­யாக மாறும்'' என பகி­ரங்­க­மாக எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார்.

அவ­ரது இந்தக் கருத்து முஸ்­லிம்­களை கடு­மை­யாகப் பாதித்­தி­ருந்­தது. இத­னை­ய­டுத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் ஞானா­சர தேரரின் இந்த அச்­சு­றுத்தல் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்­­து­மாறு கோரி பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடிதம் ஒன்றை அனுப்­பி­யி­ருந்­தது.

எனினும் அக் கடி­தத்­தினால் ஆத்­தி­ர­ம­டைந்த ஞான­சார தேரர் '' பொலிஸ் மா அதி­ப­ரிடம் மட்­டு­மல்ல ; அல்­லாஹ்­வி­டமும் முறை­யி­டுங்கள். முறைப்­பாட்டின் ஒரு பிர­தியை முஹம்மத் நபி ஊடாக அல்­லாஹ்­வுக்கு அனுப்பி வையுங்கள் '' என பத்­தி­ரி­கை­யாளர் மாநாடு ஒன்றில் தெரி­வித்­தி­ருந்தார்.


இக் கருத்து நாட­ளா­விய ரீதியில் முஸ்­லிம்கள் மத்­தியில் பலத்த சல­ச­லப்­பையும் கவ­லை­யையும் தோற்­று­வித்­தி­ருந்­தது. எனினும் அர­சாங்­கமோ பொலி­சாரோ இது பற்றி எந்தவித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

பின்னர் மொன­ரா­கல நகரில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் மீது கடந்த ரமழான் மாதத்தில் இனந்­தெ­ரி­யாத நபர்­கள் கல்­வீச்சுத் தாக்­குதல் நடத்­தி­யி­ருந்­தனர். இதனால் பள்­ளி­வா­சலின் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­தி­ருந்­தன.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாத முற்­ப­கு­தியில் பொர­லஸ்­க­முவ பள்­ளி­வா­ச­லுக்குள் புகுந்து தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இதன் போது பள்­ளி­வா­சலில் கட­மை­பு­ரியும் ஊழியர் ஒருவர் தாக்­கப்­பட்­ட­துடன் பள்­ளி­வா­சலின் உடை­மை­க­ளுக்கும் சேத­மேற்­ப­டுத்­தப்­பட்­டது. இச் சம்­பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

மேலும் வெலி­ம­டையில் ஊவா மாகாண முத­ல­மைச்­சரின் பங்­கேற்­பு­டனும் அனு­ச­ர­ணை­யு­டனும் நடை­பெ­ற­வி­ருந்த முஸ்லிம் பாட­சா­லைக்­கான அடிக்கல் நடும் நிகழ்­வுக்கு பௌத்த பிக்­குகள் தலை­மையில் வந்த குழு­வினர் எதிர்ப்புத் தெரி­வித்­த­தை­ய­டுத்து அந்த நிகழ்வு இரத்துச் செய்­யப்­பட்­ட­துடன் நிர்­மாணப் பணி­களும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டன.


கடந்த வாரம் கல்­ஹின்ன நகரில் முஸ்லிம் ஹோட்டல் ஒன்­றினுள் மது­போ­தையில் நுழைந்த நபர் ஒருவர் தக­ராறு விளை­வித்த சம்­பவம் பின்னர் இன­மு­று­க­லாக மாறி­யது. இதன் கார­ண­மாக கல்­ஹின்ன தக்­கியா பள்­ளி­வாசல் மீதும் வீடுகள் மீதும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இச் சம்­பவம் தொடர்பில் இரு தரப்­பிலும் 10 பேர் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.
அதே­போன்று அநு­ரா­த­புரம் நகரில் அமைந்­துள்ள களுத்­துறை பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்லிம் வியா­பாரி ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான அலங்­கார விள­க்­குகள் மலிவு விற்­பனை நிலையம் ஒன்­றுக்கு இனந் தெரி­யாத நபர்­களால் தீ வைக்­கப்­பட்­டது. இதனால் சுமார் ஒன்­றரை கோடி ரூபா பெறு­ம­தி­யான பொருட்கள் எரிந்து நாச­மா­கி­யுள்­ள­தாக உரி­மை­யா­ளரால் அநு­ரா­த­புரம் பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. குறித்த தீ விபத்­தா­னது மின்­னொ­ழுக்­காக இருப்­ப­தற்கு வாய்ப்­பில்லை எனவும் இன­வாத செயலே என்றும் அதன் உரி­மை­யாளர் குறிப்­பிட்­டுள்ளார்.


இதற்­கி­டையில் நேற்று முன்­தினம் இரவு அளுத்­கம நகரில் அமைந்­துள்ள பிர­பல ஆடை விற்­பனை நிலையம் ஒன்று தீயில் முற்­றாக எரிந்து நாச­மா­கி­யுள்­ளது. இத் தீ பர­வ­லுக்­கான காரணம் நேற்று மாலை வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்­லை­யா­யினும் இந்த வியா­பார நிலை­ய­மா­னது ஏலவே இரு தட­வைகள் இன­வா­தி­களால் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டது என்­பது இங்கு கவ­னிக்­கப்­பட வேண்­டி­ய­தாகும்.

2006 ஆம் ஆண்டு அளுத்­கம பகு­தியில் இன­மு­றுகல் ஏற்­பட்ட சமயம் இக் கடைக்கு தீ வைக்­கப்­பட்­டது. இதனைப் புன­ர­மைத்து மீண்டும் திறந்து வியா­பா­ரத்தை முன்­னெ­டுத்து வந்த நிலையில் கடந்த 2014 அளுத்­கம கல­வ­ரத்தின் போதும் இக் கடைக்கு மீண்டும் தீ வைக்­கப்­பட்­டதில் முற்­றாக எரிந்து நாச­மா­னது. இந் நிலை­யில்தான் நேற்று முன்­தினம் இரவும் மூன்­றா­வது முறை­யாக மூன்று மாடி­களைக் கொண்ட இக் கடை தீயில் எரிந்­துள்­ளது.


இப்­படி பல்­வேறு பார­தூ­ர­மான இன­வாத மத­வாத சம்­ப­வங்கள் தொட­ராக இந்த ஆட்­சி­யிலும் நடந்து கொண்­டுதான் இருக்­கின்­றன. எனினும் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் கடந்த அர­சாங்­கத்தைப் போன்றே இந்த அர­சாங்­கமும் முன்­னெ­டுக்­காது அலட்­சி­ய­மாக இருப்­ப­தா­னது முஸ்லிம் மக்­களை ஏமாற்­றத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இவ்வாறான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் முன்னெடுக்கப்படும்போது முஸ்லிம் அரசியல் தலைமைகள் தாம் கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் காட்டிக் கொள்கின்ற போதிலும் அவை வெறும் ஊடக பரப்புரைகளே அன்றி செயல்வடிவம் கொண்டவையாக தெரிய­வில்லை.

பிர­தேச மக்­க­ளையும் தமது ஆத­ர­வா­ளர்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வே முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இத்­த­­கைய அறிக்கை அர­சி­யலை நடத்­து­கின்­றனர். மாறாக இதனால் எந்த­வித ஆக்­க­பூர்­வ­மான விளை­வு­களும் சமூகத்­திற்குக் கிடைப்­ப­தில்­லை.

ஏதேனும் சம்பவங்கள் நடைபெறும் போது அந்த இடத்தைப் போய்ப் பார்ப்பதும் நாம் வந்துவிட்டோம்... பிரச்சினைகள் தீர்ந்து விட்டன... பிரதமருடன் பேசிவிட்டோம்... பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது... என்று அறிக்கை விடுவதுமாகவே முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்­த­­வண்­ண­முள்­ளன.


கடந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் எவ்­வாறு ஆட்­சி­யா­ளர்­களைப் பகைத்துக் கொள்ள முடி­யாது என்­ப­­தற்­காக முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் மௌன­வி­ரதம் அனுஷ்­டித்­தார்­களோ அதைப்­போன்றுதான் இப்­போ­தைய அர­சாங்­கத்­திலும் பங்­க­ா­ளர்­க­ளாக இருப்­பதால் எதுவும் பேசாது மௌனமா­க­வி­ருக்­கின்­றனர்.

நாளை தேர்தல் ஒன்று வந்தால் இந்த விட­யங்­களை ஆக்­ரோ­ஷ­மாகப் பேசி மக்­களை உணர்ச்­சி­யூட்டி வாக்­கு­களை கொள்­ளை­ய­­டிப்பர். பின்னர் எந்தப் பூதம் ஆட்­சிக்கு வந்­தாலும் அவர்­க­ளோடு இணைந்து பதவி­களைப் பெற்று அனு­ப­விப்­பர்.

இதுவே முஸ்லிம் சமூ­கத்தின் தலை­வி­தி­யாக இருக்­கு­மாயின் வெறும் ஆட்சி மாற்­றங்கள் மாத்­தி­ரமே நடக்­குமே தவிர சமூ­கத்­திற்கு எதி­ரான காட்­சி­களில் எந்­­த­வித மாற்­றங்­களும் நடக்கப் போவ­தில்லை.

கட்டுரை : பைஸ் .
கேசரி 24.9.2016 -

இந்த ஆட்சியிலும் தொடரும் பாரதூரமான இனவாத நடவடிக்கைகளுக்கு ஒரு சாம்பிள் ... இந்த ஆட்சியிலும் தொடரும் பாரதூரமான இனவாத நடவடிக்கைகளுக்கு ஒரு சாம்பிள் ... Reviewed by Madawala News on 9/24/2016 10:51:00 AM Rating: 5