Accaddemy

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கின் தீர்ப்பு சற்று நேரத்தில்.. முக்கிய சந்தேகநபர் நீதிமன்றத்துக்கு வருகை.



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாரத லக்ஷ்மன் தொழிற்சங்கங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் உட்பட மேலும் நான்கு நபர்களை  2011  ஒக்டோபர் 08ம் திகதி மாலை நேரத்தில்  கொலொன்னாவ பகுதியில் வைத்து  துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான  வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

ஷிராண் குணரட்ன, பத்மினி என் ரணவக்க, என்.சி.பி.சி. மொராயஸ் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணை  இடம்பெற்றது.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 13 பேரில் 11 ஆவது சந்தேநபரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வா 2013 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி முதல்தடவையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

, வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தோர், சற்றுமுன்னர் நீதிமன்றத்துக்கு வருகைதந்தனர் .

H B றிஸ்வானுஸ் ஸமான்   08/09/2016   கொழும்பு.

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கின் தீர்ப்பு சற்று நேரத்தில்.. முக்கிய சந்தேகநபர் நீதிமன்றத்துக்கு வருகை. பாரத லக்ஷ்மன் கொலை வழக்கின் தீர்ப்பு  சற்று நேரத்தில்.. முக்கிய சந்தேகநபர் நீதிமன்றத்துக்கு வருகை. Reviewed by Madawala News on 9/08/2016 11:06:00 AM Rating: 5