Accaddemy

மக்களை காயப்படுத்த பெல்லட் குண்டுகளை பயன்படுத்தலாம் காஷ்மீர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

காஷ்மீரில்  பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்க முடியாது’’ என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

.இந்த குண்டுகள் உயிரிழப்பை ஏற்படுத்தாது. ஆனால், கண்கள் பறிபோகும். காயங்கள் ஏற்படும். இந்நிலையில், ‘‘பெல்லட் வகை குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். போராட்டங்களின் போது பெல்லட் குண்டுகளை பயன்படுத்த உத்தரவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரி காஷ்மீர் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.பால் வசந்தகுமார் மற்றும் நீதிபதி அலி முகமது மாக்ரே ஆகியோர் நேற்று (வியாழன்) விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:

. காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பெல்லட் குண்டுகளுக்கு மாற்றாக வேறு வழிமுறைகளை கண்டறிய நிபுணர்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

அந்த குழு தனது அறிக்கையை இன்னும் அரசிடம் சமர்ப்பிக்கவில்லை. அந்த குழு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னர், இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்களை காயப்படுத்த பெல்லட் குண்டுகளை பயன்படுத்தலாம் காஷ்மீர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு. மக்களை காயப்படுத்த பெல்லட் குண்டுகளை பயன்படுத்தலாம்  காஷ்மீர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு. Reviewed by Madawala News on 9/22/2016 10:07:00 PM Rating: 5