Accaddemy

மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தில் எம்.எம்.பாறூக் இன் ஜனாஸா.














மட்டக்களப்பு, காத்தான்குடி 6ஆம் குறிச்சியை அண்டிய  கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து இன்று  திங்கட்கிழமை காலை, கல்முனைக்குடி சாய்பு வீதியைச் சேர்ந்த எம்.எம்.பாறூக் (வயது 62) என்பவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த வாகனத்தில் சடலம் காணப்படுவதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்று சடலத்தை மீட்டதாகவும் பொலிஸர் தெரிவித்தனர்.  

குறித்த வாகனமானது யாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு காத்தான்குடிக்கு வந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தில் எம்.எம்.பாறூக் இன் ஜனாஸா. மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தில் எம்.எம்.பாறூக் இன் ஜனாஸா. Reviewed by Madawala News on 9/26/2016 09:21:00 AM Rating: 5