Accaddemy

( வீடியோ & படங்கள் இணைப்பு) கர்நாடகாவில் பற்றி எரியும் தமிழக சொத்துக்கள். கன்னட அமைப்புக்கள் அட்டகாசம்.



இந்தியா:

கர்நாடகா மாநிலத்தில், தமிழகப் பதிவெண் கொண்ட 65 சொகுசு பேருந்துகள் மற்றும் 27 சரக்கு லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகா நீர் திறந்துவிட்டதை கண்டித்து பெங்ளூரூவில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.  காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவதைக் கண்டித்து, கன்னட அமைப்புகள் பெரும் வன்முறையில் ஈடுபட்டுள்ளன. தமிழக நிறுவனங்கள், வாகனங்கள், குறிவைத்து தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

இதன்படி, இன்று மாலை பெங்களூருவில் உள்ள நைஸ் சாலையில் தனியார் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த கே.பி.என், எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்துக்குச் சொந்தமான 65 பேருந்துகளை கன்னட வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். இதில் 45 பேருந்துகள் முற்றிலும் எரிந்து சேதமாகின. கேபிஎன் நிறுவனத்திற்குச் சொந்தமான 38 பேருந்துகள் எரிந்துள்ளன.

சேலத்தை மையமாகக்கொண்டு செயல்படும் கேபிஎன் நிறுவனத்தின் உரிமையாளர் நடராஜன், இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். எரிக்கப்பட்ட 65 பேருந்துகளின் மதிப்பு ரூ.50 கோடியாகும்.

இதேபோன்று, மைசூர் சாலையில் ஓய்வுக்காக லாரிகள் நிறுத்திவைக்கப்படும் வழக்கமான இடத்தில் நிறுத்தியிருந்த 27 தமிழக லாரிகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் லாரிகளில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளும் சேதமடைந்தன.

தொடர் வன்முறைச் சம்பவங்களால் கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என, கர்நாடகா மற்றும் மத்திய அரசை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வன்முறையை ஒடுக்க கர்நாடக காவல்துறை தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், மாநில போலீசாருக்கு உதவ கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பும்படி முதலமைச்சர் சித்தராமையா மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையே, சுங்கதஹெக்டே பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. போலீஸ் வாகனத்தை தீ வைத்து எரிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.




Photo published for Cauvery Row: Anger In Bengaluru, Vehicles Told Not To Go To Tamil Nadu
Photo published for Cauvery row: 30 buses set on fire in Bengaluru; Centre rushes 10 RAF companies to Karnataka - Times...

Photo published for Cauvery water row live updates: Schools closed in Bangalore after violence as buses, trucks from...
Photo published for போலீஸ் வாகனத்தை எரிக்க முயன்ற கலகக்காரர்கள்.. பெங்களூர் போலீஸ் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி











( வீடியோ & படங்கள் இணைப்பு) கர்நாடகாவில் பற்றி எரியும் தமிழக சொத்துக்கள். கன்னட அமைப்புக்கள் அட்டகாசம். ( வீடியோ & படங்கள் இணைப்பு) கர்நாடகாவில் பற்றி எரியும் தமிழக சொத்துக்கள். கன்னட அமைப்புக்கள் அட்டகாசம். Reviewed by Madawala News on 9/12/2016 10:22:00 PM Rating: 5