தெமட்டகொட சமிந்தவுக்கு மீண்டும் சிறைச்சாலை மாற்றம்.



பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவை மஹர சிறைச்சாலைக்கு மாற்ற முயற்சிகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிக்கடை சிறையில் இருந்து கடந்த ஒன்பதாம் திகதி  தெமட்டகொட சமிந்த போகம்பரை சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது இம்முயற்சி எடுக்கபட்டுள்ளது.

கொழும்பு நீதிமன்றில் இடம்பெற உள்ள வழக்குகளில் கலந்து கொள்ளவும், போகம்பரை சிறைச்சாலையில் ஏற்பட வாய்ப்புள்ள தாக்குதல்களை தவிர்க்கவுமே மஹர சிறைச்சாலைக்கு மாற்ற முயற்சிகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது..
தெமட்டகொட சமிந்தவுக்கு மீண்டும் சிறைச்சாலை மாற்றம்.  தெமட்டகொட சமிந்தவுக்கு மீண்டும் சிறைச்சாலை மாற்றம். Reviewed by Madawala News on 9/14/2016 10:15:00 AM Rating: 5