Ad Space avaiable

சவூதி அரேபியாவுக்கான பிரிட்டிஷ் தூதுவர் சிமோன் கொல்லிஸ் இஸ்லாத்தால் கவரப்பட்டார். புனித ஹஜ்ஜையும் நிறைவேற்றினார்.



இங்கிலாந்தில் இருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்தவர்களில் சவூதி அரேபியாவுக்கான பிரிட்டிஷ் தூதுவர் சிமோன் கொல்லிஸ் மற்றும் அவரின் மனைவி கலந்து கொண்டதாகவும் , குறிப்பிட்ட தூதுவர் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக வெளியான செய்திகள் இந்நிகழ்வின் மூலம் உறுதியாவதாவும் சவுதி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதி எழுத்தாளர் பவ்சியா அல் பக்ர் தூதுவர் சிமோன் கொல்லிஸ் மற்றும் அவரின் மனைவி ஹஜ் கடமையை நிறைவேற்ற இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்த படங்களை வெளியிட்டு இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட தூதுவர் தனது ஹஜ் பயணத்தை பற்றிய  பவ்சியா அல் பக்ர் இன் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், நான் 30 வருடமாக முஸ்லிம் சமூகங்களுடன் பழகி வருகிறேன். இஸ்லாம் என்னை கவர்ந்தது என தெரிவித்துள்ளார்.





சவூதி அரேபியாவுக்கான பிரிட்டிஷ் தூதுவர் சிமோன் கொல்லிஸ் இஸ்லாத்தால் கவரப்பட்டார். புனித ஹஜ்ஜையும் நிறைவேற்றினார். சவூதி அரேபியாவுக்கான பிரிட்டிஷ் தூதுவர் சிமோன் கொல்லிஸ் இஸ்லாத்தால் கவரப்பட்டார். புனித ஹஜ்ஜையும் நிறைவேற்றினார். Reviewed by Madawala News on 9/15/2016 03:19:00 PM Rating: 5