Free Space

அவுஸ்திரேலிய கிரிக்கட் கழகங்களில் கலக்கும் அதிரடி நட்சத்திரம் எம்மவர் துல்பகார் முகம்மத்.



அவுஸ்திரேலிய, வெஸ்டேன் ஈகல்ஸ் (Western Eagles) விளையாட்டு கழகத்தின் அதிரடி நட்சத்திர வீரர் துல்பக்கார் கச்சி முகம்மட் 2015/2016 ஆண்டுக்கான கிரிக்கட் சுற்றில் ஏழு போட்டிகளில் 768 ஓட்டங்களை (சராசரி 109.71) பெற்றதன் காரணமாக இந்த வருட வெஸ்டேன் சர்சஸ் கிரிக்கட் அஸ்ஸோஸியேசன் (Western Association Churches Cricket Association) உடைய பிரதிநிதி அணிக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளார்.

 போட்டிகள் இந்த வருட December 25 - 31 திகதி வரை மெல்பர்ன் (Melbourne) நகரில் இடம்பெற உள்ளது.

கடந்த ஆண்டில் துல்பக்கர் தனது அணிக்காக இரட்டை சதம் (275*, 255) மற்றும் ஒரு சதம் (134) ரண்களை விளாசியுள்ளார்.

 இவ்விரு இரட்டை சதங்களும் அவுஸ்திரேலியா (Australia) மட்டத்தில் 8ஆவது மற்றும் 15ஆவது இடங்களை பெற்றது. தனது அணியின் சக வீரர்களோடு சேர்ந்து மொத்த ரண்களை 461 ஆகவும் உயர்த்தி வெற்றி பெற்றனர்

இலங்கை திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட இவர் 4 வருடங்களுக்கு முன்பு தன் மனைவியுடன்  அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறந்த பயிற்றுவிப்பாளராகவும் விக்டோரியா (Victoria) நகரின் சமூக கிரிக்கட் தூதராகவும் (Community Cricket Ambassador) இவர்செயற்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது

தகவல்
ஜலூத் கதூமி நிஜாமுதீன்
அணித்தலைவர்


அவுஸ்திரேலிய கிரிக்கட் கழகங்களில் கலக்கும் அதிரடி நட்சத்திரம் எம்மவர் துல்பகார் முகம்மத். அவுஸ்திரேலிய கிரிக்கட் கழகங்களில் கலக்கும் அதிரடி நட்சத்திரம் எம்மவர் துல்பகார் முகம்மத். Reviewed by Madawala News on 9/02/2016 10:00:00 PM Rating: 5