Oceas

ஜமாத்–இ–இஸ்லாமி காசிம் அலி தூக்கிலிடப்பட்டதில் குறைபாடுடைய விசாரணை என பாகிஸ்தான் கண்டனம்.



அபூஸாலி முஹம்மத்  சுல்பிகார்  

வங்காளதேசத்தில் ஜமாத்–இ–இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டதற்கு கவலை தெரிவித்துஉள்ள பாகிஸ்தான் ‘குறைபாடுடைய விசாரணை’ என்று கண்டனம் தெரிவித்து உள்ளது.

வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டம் நடந்தது. அப்போது ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட சிலர் சுதந்திர போராட்டத்துக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர். அப்போது போர்க்குற்றங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறின. 30 லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக டாக்காவில் 2010-ம் ஆண்டு குற்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்படி, 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை போர் குற்றச்சாட்டின் பேரில் வங்காளதேசத்தில் 6 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர்.

ஜமாத்–இ–இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி (வயது 63) காசிம்பூர் சிறையில் நேற்று இரவு மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார்.  1971–ம் ஆண்டு வங்காளதேச பிரிவினையின் போது மிர் காசிம் அலி மீது போர் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஜமாத்–இ–இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டதற்கு பாகிஸ்தான் கவலை தெரிவித்துஉள்ளது. மேலும், ‘குறைபாடுடைய விசாரணை’ என்று பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது.

நேற்று இரவு மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விடுத்த செய்தியில், “குறைபாடுடைய விசாரணை முறையினால், 1971-ல் டிசம்பருக்கு முன்னதாக குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டு காசிம் அலி தூக்கிலிடப்பட்டதில் பாகிஸ்தான் ஆழ்ந்த கவலை அடைந்து உள்ளது.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. குறைபாடு உடைய விசாரணையின் மூலம் எதிர்க்கட்சிகளை அடக்கும் நடவடிக்கை ஜனநாயக உணர்வுக்கு எதிரானது.

விசாரணை தொடங்கியதில் இருந்து சர்வதேச அமைப்புகள், மனித உரிமைகள் அமைப்புகள், சர்வதேச சட்டமுகமைகள் வங்காளதேச கோர்ட்டு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன, குறிப்பாக நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகள் துன்புறுத்தல் குறித்து என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது
ஜமாத்–இ–இஸ்லாமி காசிம் அலி தூக்கிலிடப்பட்டதில் குறைபாடுடைய விசாரணை என பாகிஸ்தான் கண்டனம். ஜமாத்–இ–இஸ்லாமி காசிம் அலி தூக்கிலிடப்பட்டதில் குறைபாடுடைய விசாரணை என பாகிஸ்தான் கண்டனம். Reviewed by Madawala News on 9/04/2016 06:10:00 PM Rating: 5