Free Space

மடவளையில் முதியோர் தின நிகழ்வு.



உலக முதியோர் தினம்-2016.
   
  மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம், 5ஆவது தடவையாக உலக முதியோர் தினத்தை, ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை மு.ப.9.15 மணிக்கு, மடவளை மதீனா தேசிய பாடசாலையின், அஷ்ர்ஃப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடத்தவுள்ளது.

 இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக எம்து ஊரில் வாழும் சட்டத்தரணியான அல்ஹாஜ்.M.சித்தீக் பைசர் அலி அவர்களும், கௌரவ அதிதிகளாக அல்ஹாஜ்.H.M.சம்சுதீன் (கொழும்பு சப்ராஸ் ட்ரேடர்ஸ் உரிமையாளர்) அல்ஹாஜ்.S.M.அமீன் ( ரம்புக்கனை கண்டி ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

அன்றைய தினத்தில்………………………  

# எமது ஊரைச்சேர்ந்த 75 வயதிற்கு மேற்பட்ட, அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அதிபர் அல்ஹாஜ்.I.M.முஹுத்தார், ஆசிரியர் B.M.நதீர், ஆசிரியர் அல்ஹாஜ்.A.C.அப்துல் லத்தீப், ஆசிரியர்.ஜனாப்.M.நஜுமுதீன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டு,  ஞாபகச்சின்னங்கள் வழங்கப்படவுள்ளனர்.

# 2015ஆம் ஆண்டில், ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற
17 மாணவர்கள் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு,பரிசுகள் வழங்கிப்   பாராட்டப்படவுள்ளனர்.

   # சங்கத்தால் நடத்தப்பட்ட சிங்கள பேச்சுமொழி பயிற்சி நெறியை
     திருப்திகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்
     வழங்கப்படும்.            

# 2015ஆம் ஆண்டு GCE O/L பரீட்சையில் ஆங்கிள பாடத்தில் A சித்தி   பெற்று,உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு, அண்மையில் வபாத்தான ஜலீல் டீச்சரின் நினைவுப்பரிசு வழங்கப்படும்.

 # சகல பாடங்களிலும் A (9A) சித்தி பெற்ற மாணவிக்கு பரிசுகள்      
வழங்கப்படவுள்ளன.

      எனவே இவ்வைபவத்திற்கு, எமது சங்கத்தின் சகல அங்கத்தவர்களையும், அங்கத்தவராவதற்கு தகுதி பெற்றவர்களையும், மடவளையிலுள்ள சகல சங்கங்கள், நிறுவனங்களின் நிருவாகக்குழு உறுப்பினர்களையும், 2015 ஆம் ஆண்டுகளில் புலமைப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் பெற்றோர்களையும், 2016ல் தரம் நான்கில் கல்வி கற்கும் சகல மாணவர்களின் பெற்றோர்களையும், சிங்கள பேச்சுமொழி பயிற்சி நெறியில் பங்குபற்றிய மாணவிகளின் பெற்றோர்களையும்,எமது சங்கத்திற்கு நிதியுதவிய சகல அன்பளிப்பாளர்களையும், ஆதரவாளர்களையும் அன்பாய் அழைக்கின்றோம்.

                                      தகவல்:A.L.A.ஜலீல்-
                                    செயலாளர்,
                                     மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம்.


மடவளையில் முதியோர் தின நிகழ்வு. மடவளையில் முதியோர் தின நிகழ்வு. Reviewed by Madawala News on 9/29/2016 11:25:00 AM Rating: 5