Ad Space Available here

லசந்த விக்ரமதுங்க கொலையில் மூடிமறைப்பட்ட தகவல்கள் வெளிவருமா?சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையில் மூடிமறைப்பட்ட தகவல்கள் வெளிவருமா? என்ற கேள்வியுடன், குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த வேண்டுகோளில் நீதிமன்ற அனுமதியுடன் எதிர்வரும் 27-ஆம் தேதியன்று லசந்த விக்ரமதுங்கவின் உடல் தோண்டி எடுக்கப்படவுள்ள நிலையில்…

லசந்த கொலை உள்ளிட்ட பல விடயங்களை FRONTLINE நிகழ்ச்சிக்காக பேசுகின்றார் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மந்தனா இஸ்மாயில்.. வீடியோ பகுதிக்கு கீழே முழு நேர்காணலை வாசிக்கலாம்!


மந்தனா இஸ்மாயீல் கொழும்பை பிறப்பிடமாக கொண்டவர். சமூக ஆர்வலர், புலனாய்வுத் துறை ஊடகவியலாளர். கடந்த ராஜபக்ஷ ஆட்சிபீடத்தை கடுமையாக விமர்சித்ததனால் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளானவர். 2013 இல் இவரது வீடு காடையர்களால் தாக்கப்பட்டது.   சில காலம் வெளிநாட்டில் பாதுகாப்புப் பெற்று வந்த இவர், தற்பொழுது சண்டே லீடர் மற்றும் இருதின பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வி இங்கு தரப்படுகிறது.

நேர்காணல் சந்திப்பு: ஹெட்டி ரம்ஸி, அனஸ் அப்பாஸ்

மந்தனா இஸ்மாயீல் அபேவிக்ரம

(சண்டே லீடர் மற்றும் இருதின பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்)


உங்களை பற்றி…

1998 இல் நான் உயர்தரம் எழுதி விட்டு சண்டே லீடர் பத்திரிகையில் இணைந்து கொண்டேன். 2014 இல் சில மாதங்கள் TNL தொலைக்காட்சியில் ஆங்கிலச் செய்தி ஆலோசனை ஆசிரியராகப் பணியாற்றினேன். முதலில் நான், சண்டே லீடர் பத்திரிகையில் பிரசுரமான ‘நிவ் மெகஸின்’ என்னும் சஞ்சிகையில் எழுதினேன். அதன் பின்னர் பத்திரிகையில் செய்திகளை எழுதினேன்.

பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று செய்திகளை திரட்டவும் நான் நியமிக்கப்பட்டேன். பிறகு நீதிமன்றச் செய்தியாளராக இருந்தேன். அதன் பிறகு பாராளுமன்ற செய்திகளை தொகுப்பதற்குப் பணிக்கப்பட்டேன். தேர்தல் காலங்களில் அதனோடு தொடர்புபட்ட வன்முறைகளை எழுதினேன். யுத்த காலப்பகுதியில் யுத்த களச் செய்திகளை வடித்தேன்.

சில காலம் சண்டே லீடர் பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்தேன். 25 ஆவது வயதில் நான் செய்தி ஆசிரியராகப் பணியாற்றினேன். பிறகு நான் புலனாய்வுத் துறை தகவல்களை தொடராக எழுத ஆரம்பித்தேன். சில காலத்தின் பின்பு நான் பிரதம துணை ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். இக்காலப் பகுதியிலேயே லசண்த விக்ரமதுங்க கொல் லப்பட்டார்.

பின்னர் பெட்ரிகா ஜேன்ஸ் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரானார். அவ் வேளையில் நான் பத்திரிகையில் சமகால அரசியல் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன். 2012 இல் நான் நிர்வாக ஆசிரியராக நியமன மானேன். அதன் பின்னர் 2013 ஆகஸ்ட் 23 ஆம் திகதி அப்போதைய ஆட்சி பீடத்தை விமர்சித்து தொடர்ந்தேர்ச்சியான கட்டுரைகளை எழுதி வந்ததனால், ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழால் பல அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந் தது. விளைவாக, வெளிநாட்டில் சில காலம் தஞ்சம் புகுந்தேன்.

அக்காலப்பகுதியில் சண்டே லீடர் பத்தி ரிகை ராஜபக்ஷவுக்கு சார்பான ஒருவரின் கைக்குச் சென்றது. அப்போது நான் பதவி கவிழ்க்கப்பட்டேன். அதன் காரணமாக நான் 2013 செப்டம்பர் மாதம் தொடக்கம் 2015   ஜூன் மாதம் வரையில் வெளிநாட்டில் இருந் தேன். அதன் பின்னர் 2015 ஜூன் மாதத்தில் நான் மீண்டும் சண்டே லீடர் பத்திரிகையில் இணைந்தேன். அங்கு முகாமைத்துவ ரீதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அன்று தொடக்கம் நான் சண்டே லீடர் மற்றும் இருதின பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராக இருந்து வருகிறேன்.

சண்டே லீடர் மற்றும் இருதின பத்திரிகைகளை பற்றியதொரு அறிமுகத்தை வழங்க முடியுமா?

சண்டே லீடர் பத்திரிகை 1994 இல் ஆரம்பிக்கப்பட்டது. குரலற்றவர்களின் குரலாகவும் ஊழல் மோசடிகளை ஒழித்து நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் ஸ்தாபிப்பதனை மூல வேதமாகக் கொண்டே சண்டே லீடர் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. இப்பத்திரிகையின் ஸ்தாபகர் லசன்த விக்ரமதுங்க. யுத்தம் நிலவிய காலப்பகுதியில் சிறுபான்மையின தமிழர்களின் உரிமைகள் பற்றிப் பேசப்பட்டதனால் அவருக்கு புலி முத்திரை குத்தப்பட்டது.

சண்டே லீடர் பத்திரிகை தேசிய சர்வ தேசிய விருதுகளை பெற்றுள்ளது. பெயர் பெற்ற பல ஊடகவியலாளர்களை உருவாக்கியுள்ளது. 2004 பொதுத் தேர்தலுக்கு முன்னர் இருதின பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. மொஹால் லால் பியதாஸ என்பவர் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இப்பத்திரிகையும் பல விருதுகளை பெற்றுள்ளன.

இருதின மற்றும் சண்டே லீடர் பத்திரிகை கள் ஏனைய பத்திரிகைகளைப் போன்ற சாதா ரண வாராந்தப் பத்திரிகைகளல்ல. இவை புலனாய்வுத்துறை ஊடகவியலை முதலில் அறிமுகப்படுத்திய பத்திரிகைகள். நாம் சாதா ரண விடயங்களுக்கு அப்பால் சென்று ஆய்வு ரீதியிலான தகவல்களை வெளிப்படுத்தி வரு கிறோம். அரசியல் ரீதியில் நன்கு புரிதல் உள்ளவர்களாகவும் சமூக மாற்றமொன்றை விரும்புகின்ற ஜனநாயகம், நல்லாட்சி போன்ற முன்னேற்றகரமான சமூக முறையை நோக்கி செல்ல விரும்புகின்றவர்களாகவும் உள்ள மக்களே எமது பத்திரிகைகளின் வாசகர்களாக உள்ளனர்.

சண்டே லீடர் பத்திரிகை கடந்த காலப்பகுதிகளில் பல்வேறுபட்ட அடக்குமுறைகளுக்குட்பட்டு வந்தது. அதற்குரிய காரணம் என்ன?

மக்களுடைய குரலாகவே நாம் எப்போதும் இருந்துள்ளோம். மக்களுடைய சொத்துக்கள் மோசடி செய்யப்படுகின்ற பொழுது, மக்கள் அடக்குமுறைகளுக்குட்படும் பொழுது அவர் களுக்கு நீதி நிலைநாட்டப்படாத பொழுது     சண்டே லீடர் பத்திரிகை அவற்றுக்காக வேண்டி குரல் எழுப்பியுள்ளது. சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் சண்டே லீடர் பத்திரிகை தாக்குதல்களுக்கு உட்பட்டன.

2005 இல் ராஜபக்ஷ ஆட்சி துவங்கிய பொழுது சந்திரிகா அம்மையார் லசன்த விக்ரமதுங்கவை சந்தித்து தன்னை பேட்டி எடுக்குமாறும் அதில் பல தகவல்களை வெளிப் படுத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். உடனே லசண்த அவரை நேர்கண்டிருந்தார் இரண்டரை பக்களில் அந்நேர்காணலை பிர சுரித்தோம். அப்பத்திரிகை அவ்வகையிலேயே மக்களின் தோழனாக இருந்தது.

எமக்கு யார் யார் என்பது முக்கியமல்ல. நாம் யாரினதும் தனிப்பட்ட கோபங்களை வைத்து எழுதுவதுமில்லை. தவறுகள் எங்கு இழைக்கப்பட்டாலும் அதை எழுதுவோம். அது சரி செய்யப்பட்டு சமூகத்திற்கு நலன் ஏற்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த உங்களுடைய அவதானங்கள் என்ன?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலை நாட்டி நல்லாட்சியை நிறுவ வேண்டுமென்ற நோக்கிலேயே இவ்வரசாங்கம் ஏற்படுத்தப் பட்டது. தற்பொழுது ஒரு வருடத்திற்கும் அதிகமான நாட்கள் கழிந்துள்ளன. பாதிக் கப்பட்ட தரப்பினர்களுக்கு நீதி நிலை நாட் டப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார் கள் எனக் கூறப்பட்டது. தற்பொழுது ஒரு சில விவகாரங்களே நுனிப்புல் மேயப்படுகின்றன.

பரிசோதனைகள் மந்த கதியிலுள்ளன. தராதரம் பாராமல் நீதி நிலைநாட்டப்படுவதாகவே எமக்குக் கூறப்பட்டது. கடந்த ஆட்சிக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த பரிசோதனைகளின் அறிக்கைகள் கூட இன் னும் வெளியிடப்படவில்லை. தற்பொழுது இவ்வாட்சி நிலவி ஒரு வருடங்களுக்கும் அதிகம். பரிசோதனைகளை நிறைவுக்கு கொண்டு வர இன்னும் அதிக காலம் எடுக்க லாம். ஆனாலும் நீதி நிலை நாட்டப்படும் என்னும் நம்பிக்கை மக்கள் மத்தியில் உருப் பெற வேண்டும்.

அந்நம்பிக்கை இன்னும் மக்கள் மத்தியில் தோன்றவில்லை. ஏனெனில், கடந்த அரசாங்கம் நிலவிய காலப்பகுதியில் கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கான பலர் இவ்வரசாங் கத்துடனும் கூட்டுச் சேர்ந்துள்ளனர். சில விவ காரங்களுடன் தொடர்புடைய தகவல்களை பெற அவர்கள் சாட்சியாளர்களாகக் கொள் ளப்படலாம். ஆனாலும் அதற்காக வேண்டி அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை கவ னத்திற்கொள்ளாமலிருப்பது எந்த விதத்தில் நியாயமாகிறது? இவற்றை மக்கள் அவதா னித்துக் கொண்டுள்ளார்கள்.

ராஜபக்ஷ அரசாங்கம் கூடுதலான கடன் தொகைகளைப் பெற்று பிரயோசனமற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததினூடாக பல கோடிக்கணக்கான நிதித்தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அக்கடன் தொகையை அடைப்பதற்காக வேண்டி இவ் வரசாங்கத்தின் கீழாலுள்ள மக்கள் மீது அதிக வரி சுமத்துவது ஆரோக்கியமான விடயமொன்றல்ல. அதன் பெறுபேறுகளை இவ்வரசாங்கத்திற்கு கிட்டிய காலத்தில் சந்திக்க நேரிடும்.

அவர்கள் கடன்பட்டார்கள் என்பதற்கு மக்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. ராஜபக்ஷ ஆட்சிபீடம் கொள்ளையடித்த சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும். இன்று மக்களுடைய செலவுகள் இரட்டிப்பாகியுள்ளன. கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசன்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான பரிசோதனைகள் தற்பொழுது முன்னேற்றகரமான நிலையில் உள்ளனவா? அவருடைய  கொலை தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகையின் அவதானங்களும் முன்மொழிவுகளும் என்ன?

லசன்தவின் கொலை தொடர்பிலான பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. அதன் வேகம் குறித்த பிரச்சினைகள் எமக்குள்ளன. 2009 ஜனவரி 8 இல் லசன்த விக்ரமதுங்க கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு ஏழு வருடங்கள் கடந்துள்ளன. பரிசோதனைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இராணுவ உளவுப் பிரிவினர் மீதே சந்தேகங்கள் கூடுதலாக வலுத்துள்ளன.

பிரகீத் எக்னெலிகொட விவகாரத்திலும் இராணுவ உளவுத்துறையிலுள்ள சிலரே விசாரிக்கப்பட்டனர். யுத்தம் முடிவுறும் காலப் பகுதியிலேயே லசன்த கொல்லப்பட்டார். நாட்டில் அது உச்சகட்ட பாதுகாப்பு நிலவிய காலப்பகுதி. தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து வந்த காலப்பகுதி. கொழும்பு மற்றும் அதற்கு அண்மித்த பகுதிகளில் அதியுச்ச பாதுகாப்பு நிலவிய காலப்பகுதி.

எனவே இவ்வாறானதொரு காலப்பகுதி யில் ஒரு கோஷ்டி ஆயுதங்களை ஏந்திக் கொண்டு மோட்டார் வண்டிகளில் எவ்வாறு சுற்றித் திரிவார்கள்? எல்லா தொலைத் தொடர்பு வலையமைப்புக்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்ற வேளையில் இக்குழுவினர் எப்படி கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்திக் கொண்டு கொழும்பு பிரதான வீதிகளில் சுற்றி திரிந்து இச்செயலை புரிந்திருப்பார்கள்?

மக்களுக்கும் இவ்விடயம் தொடர்பில் சாதாரண சந்தேகங்கள் உள்ளன. எனவே லசன்தவை கொலை செய்தவர்கள் இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. எனவே அப்போதிருந்த இராணுவத் தலைமைகளும் பாதுகாப்புத்துறை பிரதானிகளுமே இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும். அப்போதைய பாதுகாப்புச் செயலாளருக்கு அச்சுறுத்தல் நிலவியபோது அதனோடு சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். அவ்வளவு திறமையான அதிகாரிகள் உள்ளார்கள். ஆனால் லசன்தவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை.

இலங்கை இராணுவம் உலகில் சிறந்த ஒழுக்கமிகு இராணுவம் என சொல் லப்படுகிறது. அவ்வாறு நற்பெயருள்ள இராணுவமொன்று ஒருபோதும் உத்தரவொன்றில்லாமல் இராணுவ முகாமை விட்டும் வெளியே செல்வதில்லை. இவர்கள் கட்டளை பிரகாரம் செயற்படுபவர்கள். இவர்களுக்கு எங்கிருந்து உத்தரவுகள் வந்தது?

பல்லின மக்கள் வாழும் இலங்கை சூழலில் நல்லிணக் கத்தை கட்டியெழுப்புவதில் ஊடகங்களின் பங்களிப்புகள் திருப்திகரமானதாக உள்ளதா?

யுத்தத்திற்கு பின்னர் சமூகங்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்குரிய நல்ல சூழல் காணப்பட்ட பொழுதிலும் அது முறையாக கைக்கொள்ளப்படவில்லை. பதிலாக சமூகங்களுக்கிடையிலான உறவுகளை அறுத் தெறியும் வகையிலான இனவாதப் பிரசாரங்கள் திட்டமிட்ட முறையில் முன் னகர்த்தப்பட்டு வந்தன. சில ஊடகங்களும் இனவாத அமைப்புக்களின் ஊது குழல்களாக செயற்பட்டன.

நல்லிணக்கம் என்றால் என்ன என்பதனை சரியாக மக்களுக்கு தெளிவு படுத்தும் பொறுப்பை ஊடகங்கள் ஏற்க வேண்டும். தீவிரவாத அமைப்புக்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் சகல ஊடகங்களும் ஒன்றிணைய வேண்டும். ஊடகங்கள் வெள்ளப்பெருக்கு தொடர்பில்  பேசின. வடக்கு மக்களும் வெள்ளத் தால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் அங்குள்ள மக்கள் எதிர்கொண்ட பிரச்சினை கள் தொடர்பில் எத்தனை ஊடகங்கள் குரல் எழுப்பின? சில போது அங்குள்ள வெள்ளப்பெருக்கு இங்கு ஏற்பட்டதைப் போன்று கடுமையற்றதாக இருக்கலாம். ஆனால் அவர்களும் ஒருவகையில் பாதிக்கப்பட்டார்கள்.

வடக்கிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு நிலையான வீடுகள் இல்லை. அவர்கள் தற்காலிக கூடாரங்களில் வாழ் கிறார்கள். கடுமையான காற்றுடன் கூடிய மழை ஏற்படும் பொழுது அக் கூடாரங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன. அவை பற்றியும் ஊடகங்கள் பேச வேண்டும். அப்போது தான் எல் லோரும் ஒன்று என்கின்ற மனநிலை வாசகர்கள் மத்தியில் உருவாகும். நாம் வித்தியாசமான அணுகுமுறைகளை காண்பிப்பது பொருத்தமல்ல. எல்லோரும் ஒன்று என்ற நிலையைத் தோற்று விக்க வேண்டும்.

வெள்ள அனர்த்தம் கொழும்பில் ஏற்படுத்திய பாதிப்புக்களுக்கு கடந்த அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டுமல்லவா?

தற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் படி அனர்த்த முகாமைத்துவ திட்டங்களுக்கென வழங்கப்பட்ட நிதி வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை ஊர்ஜிதமாகியுள்ளன.  அது போன்று பெருமளவிலான நிவாரணப் பொருட்களும் மோசடி செய்யப் பட்டுள்ளன. இன்னும் பல அனர்த்த முன் எச்சரிக்கை கருவிகள் சேதமடைந்த நிலையில் பழுதுபார்க்கப்படாமல் உள் ளன. அனர்த்த முகாமைத்துவ அமைச்சொன்றும் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் குறித்த அதிகாரிகள் எவரும் இதற்கு பொறுப்புச் சொல்ல முன்வருவதில்லை. இலங்கையில் வருடத்திற்கு ஒரு முறை ஏதாவதொரு அனர்த்தம் இடம்பெற்றுக் கொண்டுதான் உள்ளது. எனவே அனர்த்த முகாமை தொடர்பில் இங்கு பாரியதொரு பிரச்சினை உள்ளது.

ஏதாவதொரு அனர்த்தம் நிகழும் பொழுது செயற்படக்கூடிய முறை தொடர்பிலான பொறிமுறையொன்று எம்மிடம் இல்லை. அனர்த்தமொன்று ஏற்படும்பொழுது குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள பொறுப்பு வாய்ந்த அரச அதி காரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை கணக்கில் எடுத்து நிவாரணப் பணிகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சிலருக்கு நிவாரணம் கிடைக்கும். இன்னும் சிலருக்கு கிடைக்காது போகும்.

புதிதாக வளர்ந்து வரும் ஆய்வு ரீதியான தகவல்களை வெளிக் கொணரக்கூடிய ஊடகவியலாளர்களுக்கு ஒரு புலனாய்வுப் பத்திரிகையின் ஆசிரியர் என்ற வகையில் கூற விரும்பும் செய்திகள் என்ன?

புலனாய்வுத் துறை ஊடகவியல் என்பது இயல்பாகவே ஒருவருக்குள் வரவேண்டியதொரு விடயம். நாம் அக் காலப்பகுதியில் இக்கலையை மிகவும் கஸ்டப்பட்டுப் படித்தோம். நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டி வரும். சிலபோது முக்கிய தகவல்களை பெற சிலரை தொடர்புகொள்ள முடியாமலும் போகும். அப்போது அங்கு செல்ல நேரிடும். மழையில் நனைய வேண்டி யேற்படும். வெயிலிலும் காய வேண்டி வரும்.

குறித்த விடயம் தொடர்பிலான தக வலைப் பெற வேண்டும் என்ற ஆர்வம், தேவை எம்மில் இருக்க வேண்டும். எம்மில் ஆர்வம் இருந்தால் செய்ய முடியாதது ஒன்றும் இருக்காது. நான் என்ன செய்கிறேன் என்பது பற்றிய மனப்பூர்வ உணர்வும் அதில் நம்பிக்கை யும் காணப்பட வேண்டும். நான் இதை ஏன் செய்கிறேன் என்பது தொடர்பிலான விளக்கம் எம்மிடம் இருக்க வேண்டும்.

இவை எல்லாம் ஒருவரிடம் இணை யும் போதே ஒருவருக்கு சிறந்ததொரு புலனாய்வுத் துறை ஊடகவியலாளராக முடிகிறது. திறந்த மனதோடு இதனை ஆரம்பிக்க வேண்டும். எந்தவொரு விவ காரத்தையும் பற்றி ஆராய முன்னர் அது பிழை இது பிழை என்கின்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கக் கூடாது.

இவ்வாறானதொரு விடயம் ஏற்பட் டுள்ளது என்னும் அமைப்பில் அதை திறந்த மனதுடன் ஆரம்பிக்க வேண்டும். அதன் உண்மைத் தன்மை என்ன என் பதை தேடிப்பார்க்க வேண்டும் என்ற உணர்வுடனேயே செல்ல வேண்டும்.

நாம் ஒரு முடிவோடு அங்கு செல் லும் போது ஒரு தரப்பினருக்கு அதனால் அநீதி ஏற்படும். புலனாய்வுத் துறை ஊடகவியலாளர் ஒருபோதும் தனிப்பட்ட உணர்வுகளுக்கு அடிபணி யக் கூடாது. எல்லோருக்கம் நீதியை நிலை நாட்ட வேண்டும். சமூக உயர்வும் எம்மில் மேலோங்கியிருக்க வேண்டும்.

ஊடகவியலாளர் அனஸ் அப்பாஸ் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மந்தனா இஸ்மாயில்.

லசந்த விக்ரமதுங்க கொலையில் மூடிமறைப்பட்ட தகவல்கள் வெளிவருமா? லசந்த விக்ரமதுங்க கொலையில் மூடிமறைப்பட்ட தகவல்கள் வெளிவருமா?  Reviewed by Madawala News on 9/20/2016 01:51:00 PM Rating: 5