Free Space

நம் முன்னோர்கள் காலத்தில் பேஸ்புக் இருந்திருந்தால் எப்படி எல்லாம் பதிவுகள் வந்து இருக்கும் ?



- By: Athambawa Waaqir Hussain -

1) நாளைக்கி சூடடிக்க போகணும், டேக் பண்ணின தத்திக்காராக்கள் எல்லாம் வந்துடுங்கப்பா...
-முகாமை

2) கொள்ளி பொறுக்க போனப்ப, ஒரு மான் அம்புட்டுச்சி, காய வச்சி கணக்கு பார்க்கணும்

3) இலங்கையில் அதிக செலவில் இறக்குமதி செய்யப்பட்ட காளை மாடு, வரியெல்லாம் சேர்த்தா பத்தாயிரமாம்...

4 வீடுகளில் பாவிக்கப்படும் "கொள்ளி அடுப்பா" உடல் நலத்துக்கு கேடு அல்லது "உமி அடுப்பா" கேடு, சூடான விவாதம்.

5) மட்டக்களப்புல "அரசிளம் குமாரி "படம் ஓடுதாம், நாலு டிக்கெட் கெடச்சிட்டு...ரென்றூவா ....அல்ஹம்துலில்லாஹ்...

6) சவூதிக்கு போகணும், வீசா அடிக்க இந்தியாவுக்கு போகணும் , என்ன வாழ்த்துங்க பிரண்ட்ஸ் ....

7) இன்னிக்கி புள்ளா பிசி , அடுத்த தெருவுல மூணாம் கத்தம், அதுக்கடுத்த
தெருவில ஏழாம் கத்தம் , தட்டு புளியானம் செம டேஸ்ட்.

8) இனி ஒரு மாசத்துக்கு பேஸ்புக் வரமாட்டன் பிரண்ட்ஸ், காடு வெட்ட வாப்பாவோட போகணும்....பீலிங் ஹாப்பி ....

9) எஸ் எஸ் எல் சி பாஸ் பண்ணிட்டன், இனி டீச்சர் அப்பிளிகேஷன் போடணும்....வாழ்த்துங்க பிரண்ட்ஸ்....

10) நாளைக்கி பெருநாளாம், பள்ளி அதியாரி சந்தியில கூவிட்டு போறாரு.......

11) என்னோட கலியாண உடுப்பு பிரண்ட்ஸ், வெள்ள சட்டையும் , வெள்ள சாரனும் எப்படி இருக்கு.

*சூடடிக்க = வேளாண்மை
*தத்திக்காராக்கள் = பாரம்பரிய  வேளான்மை ஊழியர்கள்,
நம் முன்னோர்கள் காலத்தில் பேஸ்புக் இருந்திருந்தால் எப்படி எல்லாம் பதிவுகள் வந்து இருக்கும் ? நம் முன்னோர்கள் காலத்தில் பேஸ்புக் இருந்திருந்தால் எப்படி எல்லாம் பதிவுகள் வந்து இருக்கும் ? Reviewed by Madawala News on 9/28/2016 09:06:00 PM Rating: 5