Accaddemy

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - பேராளர் படிவம் இதோ.



இலக்கிய ஆய்வகம் நடத்தும் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டுக்கான இலங்கைப் பேராளர் படிவங்களைத் தற்போது இணையத்திலிருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மாநாடு பற்றிய விளக்கக் குறிப்பு, பிராந்திய இணைப்பாளர்கள் தொடர்பிலக்கங்கள், பேராளர் படிவம் மற்றும் இலக்கியப் படைப்பாளிகளின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் முகமாகவும் அதிலிருந்து பாராட்டு, கௌரவம் வழங்குவதற்கான தெரிவுகளை மேற்கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்பட்ட படிவம் ஆகியவற்றை இலக்கியப் படைப்பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் தரவிறக்கிக் கொள்ள முடியும்.


மாநாட்டில் பேராளராகக் கலந்து கொள்ளும் ஒருவர் தமது பிராந்திய மாநாட்டு இணைப்பாளர்களிடம் விண்ணப்பங்களை ஒப்படைப்பது விரும்பத் தக்கது. கிட்டிய பிராந்தியத்தில் இணைப்பாளர்கள் இல்லாதவர்கள் கீழுள்ள முகவரிக்குத் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.

Dr.Jinnah Sherifudeen
16, School Avenue,
Off Station Road,
Dehiwela

விண்ணப்பங்களையும் விபரங்களையும் இணையத்திலிருந்து தரவிறக்கிக் கொள்வதற்கான இணைப்புகள் கீழே .
https://goo.gl/dHmQFL
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - பேராளர் படிவம் இதோ. உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - பேராளர் படிவம் இதோ. Reviewed by Madawala News on 9/22/2016 02:14:00 PM Rating: 5