காணாமல் போன சிறுவன் சிறுமி மீட்பு.. வகுப்புக்குச் செல்வதாக கூறி ரயிலில் எஸ்கேப்.



உப்புவெளி பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட இரு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த வேளை வாழைச்சேனை பொலிஸாரால் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை - உப்புவௌி பகுதியின் மிஹிதுபுர பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதான சிறுமி மற்றும் 11 வயதான சிறுவனும், மேலதிக வகுப்புக்குச் செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

பின்னர் இவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த இருவரும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன சிறுவன் சிறுமி மீட்பு.. வகுப்புக்குச் செல்வதாக கூறி ரயிலில் எஸ்கேப். காணாமல் போன சிறுவன் சிறுமி மீட்பு.. வகுப்புக்குச் செல்வதாக கூறி  ரயிலில் எஸ்கேப். Reviewed by Madawala News on 9/13/2016 03:07:00 PM Rating: 5