Free Space

எப்படியெல்லாம் மோசடி பண்றாங்க.. (இவர்கள் உங்களையும் தேடி வரலாம் கவனம்)



புற்று நோயினால் கையை இழந்த யுவதி ஒரு­வ­ருக்கு உலக நிதி­யு­தவி திட்­டத்தின் மூலம் பெரு­ம­ளவு நிதி­யு­தவி பெற்றுத் தரு­வ­தாகக் கூறி யுவ­தியின் வங்கிக் கணக்­கி­லி­ருந்து சுமார் 25,800 ரூபா பணத்தை
மோச­டி­யாக பெற்றுக் கொண்ட பெண் ஒருவர் குறித்து நாவுல பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

மாத்­தளை, நாவுல பொலிஸ் பிர­தே­சத்தில் ரஜ­வெல கிரா­மத்­தி­லேயே இம் மோசடிச் சம்­பவம் நிகழ்ந்­துள்­ள­தாக மாத்­தளை பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தது.

புற்றுநோயினால் கையை இழந்த யுவதி ஒரு­வரின் வீட்­டிற்கு வந்த பெண் ஒருவர் தான் அரச சார்­பற்ற நிறு­வனம் ஒன்­றினைச் சேர்ந்­தவர் என்றும் உலக நிதி­யு­தவி திட்­டத்தின் மூலம் அதி­க­ளவில் நிதி­யு­தவி பெற்­றுத்­தர முடியும் என தெரி­வித்துள்ளார்.

இதற்கு முதலில் 50,000 ரூபா பணத்தை வைப்­பி­லிட்டு வங்கி கணக்கு ஒன்று ஆரம்­பிக்­கப்­பட வேண்டும் என்றும் அதன் பின்னர் அவ் வங்கிக் கணக்­கிற்கு
உலக நாட்டு நிதி­யு­த­வி­யாக பணம் வைப்­பி­லி­டப்­படும் என்றும் அப் பெண்
ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். இத­னை­ய­டுத்து யுவ­தியின் வயோ­திப தாயார் அய­ல­வர்­க­ளிடம் கட­னாக 26,000 ரூபா திரட்டிக் கொண்டு அப்­பெண்ணை அணு­கி­யுள்ளார்.

அப்பெண் அத்­தாயை அழைத்துக் கொண்டு அரு­கி­லுள்ள வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு ஒன்­றினை அத்­தாயின் பெய­ருக்கு ஆரம்­பித்து துரி­த­மாக அட்டை மூலம் பணத்தை பெற்றுக் கொள்­வ­தற்­கான ஏ.டி.எம். அட்டை ஒன்­றி­னையும் பெற்றுக் கொண்­டுள்ளார்.

பின்னர் அத்­தா­யிடம் வங்கி சேமிப்பு புத்­த­கத்­தையும் பணம் பெறும் அட்­டை­யையும் கைய­ளித்­து­விட்டுச் சென்­றுள்ளார். அதனை பெற்றுக் கொண்ட தாய் வீட்­டிற்குச் சென்று பரி­சீ­லித்த போது தம்­மிடம் வழங்­கப்­பட்­டது.
வங்­கியின் கணக்கில் பணம்

மீளப் பெறும் அட்டை (ATM) அல்ல அது கைய­டக்க தொலை­பே­சிக்­கான சிம் அட்டை என தெரிய வந்­துள்­ளது.

உட­ன­டி­யாக வங்­கிக்கு சென்று ஆராய்ந்த போது கணக்கில் வைக்­கப்­பட்ட 26,000 ரூபா பணத்தில் 25,800 ரூபா மீளப் பெற்­றி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.
எப்படியெல்லாம் மோசடி பண்றாங்க.. (இவர்கள் உங்களையும் தேடி வரலாம் கவனம்) எப்படியெல்லாம் மோசடி பண்றாங்க.. (இவர்கள் உங்களையும் தேடி வரலாம் கவனம்) Reviewed by Madawala News on 9/28/2016 11:00:00 AM Rating: 5