Oceas

இப்பகுதி மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் தொடர்ந்து நிலவி வருகின்றது. அதனை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



(எம்.எம்.எம்.எ ரம்ஸீன்)

கல்ஹின்னை பகுதியில் பள்ளிவாசல் மீது கல்வீச்சுத் தாக்குதல்  மேற்கொண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டுள்ளார்.

17.09.2016 சனிக்கிழமை  கண்டி கல்ஹின்னை கிராமத்திற்கு  விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம்  கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகிய பள்ளிவாசல் மற்றும் வீடுகளைப் பார்வையிட்டார்.

இங்கு  அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கல்ஹின்னையில் இடம்பெற்ற சம்பவத்தைப் பயன்படுத்தி  கல்ஹின்னை மற்றும் சூழவுள்ள பகுதிகளில்   இரு இனங்களுக்கும்; மத்தியில் நிலவும் புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணத்தை சீர்குலைக்க தீய சக்திகள் முற்படலாம்.

எனவே,  இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமலிருப்பதற்கான    செயற்பாடுகள் அவசியமாகும்.

இப்பகுதி மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் தொடர்ந்து நிலவி வருகின்றது. எனவே, மக்கள் மத்தியில்  அச்சத்தையும் பீதியையும் தணிப்பதற்கான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

எனவே இவ்விடயத்தை இரு தரப்புக்கள் மத்தியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில்; கவனத்திற் கொள்வது அவசியமாகும்.

அரசாங்கம் இனங்களுக்கு மத்தியில் நல்லியக்கத்தை கட்டியெழுப்பும் பணியை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளிவாசல் மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனவே பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.







இப்பகுதி மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் தொடர்ந்து நிலவி வருகின்றது. அதனை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் தொடர்ந்து நிலவி வருகின்றது. அதனை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். Reviewed by Madawala News on 9/18/2016 08:39:00 AM Rating: 5