Free Space

இன்று காலை வீட்டிலிருந்து காணாமல் போன சிறுமி, புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.



திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணி பகுதியில் நான்கு வயதுச் சிறுமியின் சடலமொன்று, இன்று வியாழக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம், நல்லூர்-நீலாங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அஜந்தா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 9 மணியளவில், வீட்டிலிருந்த சிறுமி, காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்ததையடுத்து தேடுதலில் ஈடுபட்ட கிராமமக்கள், காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலத்தைக் கண்டு, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை வீட்டிலிருந்து காணாமல் போன சிறுமி, புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு. இன்று காலை வீட்டிலிருந்து காணாமல் போன சிறுமி,  புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு. Reviewed by Madawala News on 9/08/2016 06:53:00 PM Rating: 5