Ad Space Available here

( படங்கள் இணைப்பு ) இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிகழ்வுகள்.மூதூரில் ஹஜ் பெருநாள் தொழுகை பொது விளையாட்டு மைதானத்தில்

- ரபீக் ராஜா -

இன்று மூதூரில் ஹஜ் பெருநாள் சுன்னத்துத் தொழுகை அல்_ ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது

இஸ்லாமிய உண்மையான வரையரைக்கு ஏற்ப இந்நிகழ்வு நடந்தேறியதுடன் அனைவரும் திடலில் தொழக்கூடிய ஒரு சந்தர்ப்பமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

வருடாவருடம் இந்த ஏற்பாட்டினை அல் ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையத்தால் ஏற்பாடு செய்து தூய இஸ்லாத்தினை சமூகத்திற்கு தெளிவுபடுத்துவது மெச்சத்தக்கது.
நபி வழியில் பெருநாள் தொழுகை மீராவோடை ஆற்றங்கரை ஓரம் றிபாயா அரிசி ஆலை வளாகத்தில்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்…..

புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை அல்-கிம்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மீராவோடை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள றிபாயா அரிசி ஆலை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் ஆயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களும்  கலந்து கொண்டனர்.

இதில் நிறுவனத்தின் தலைவர் மௌலவி எம்.எம்.எஸ் ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் பெருநாள் குத்பா உரையை நிகழ்த்தினார்.

தகவல்
நிறுவனத்தின் ஊடக செய்தியாளர்
அஸ்பாக் 
அனா ( வாழைச்சேனை அந் நூர் தேசிய கல்லூரி மைதானத்தில் )

உலக முஸ்லீம்கள் இன்று (12.09.2016) 'ஈதுல் அல்ஹா' ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு வாழைச்சேனை முஹைதீன் ஜ-ம்ஆ பள்ளிவாயல் நிருவாகம் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் வாழைச்சேனை அந் நூர் தேசிய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.

இதில் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களை சேர்ந்த பெருந்திறளான ஆண்கள் கலந்து கொண்டனர்.

பெருநாள் தொழுகையையும் கொத்பா பேருரையையும் மௌலவி அஷ்ஷேக் ஏ.ஜி.எம்.றிஸ்வி நடாத்தி வைத்தார்.
இன்று காலை அம்பாறை, பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

படப்பிடிப்பு - பைஷல் இஸ்மாயில் 


(அல் அதர் மீடியா)

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை காத்தான்குடி கடற்கரையில் (ஆ.ம. ஹாஜியார் வளவிற்கு முன்னால்) இன்று (12) திங்கட் கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.

அதிகளவான ஆண்களும் பெண்களும் இந்தத் தொழுகையை ஆர்வத்துடன் நிறைவேற்றினர்.

பொருநாள் தொழுகையையும் “நரகை விட்டும் பாதுகாக்கும் தர்மம்” எனும் தலைப்பில் குத்பாவையும் மௌலவி அல்-ஹாபிழ் இஸட்.எம். அஸ்ஹர் (பலாஹி) அவர்கள் நிகழ்த்தினார்.
DHARUL ATHAR ADH DHAVIYYA, 
P.O.Box 19, KappalAlim Lane, New Kattan Kudy 02, Sri Lanka. - புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -

புத்தளம் இஸ்லாமிய முன்னணி  அமைப்பு  புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரி மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் கொத்துபா பிரசங்த்தினை அஷ்ஷேய்க் மின்ஹாஜ் (இஸ்லாஹி) நடத்துவதையும்,கலந்து கொண்ட ஜமாத்தினரையும்,படங்களில் காணலாம்


(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல்,  கல்முனை ஹூதா ஜூம் ஆ பள்ளிவாயல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் நடாத்திய புனித ஹஜ்ஜூப் பெருநாள் நபி வழித் தொழுகை, ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று (12) திங்கட் கிழமை இடம்பெற்றது.

காலை 6.30 மணிக்கு ஆண் பெண் இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக இடம்பெற்ற இத்தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் கல்முனை அன்ஸா ரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். ஸபீர் நடாத்திவைத்தார். 

மௌலவி ஏ.எல்.எம். ஸபீர் அவர்கள் நிகழ்த்திய குத்பா பிரசங்கத்தில், புனித தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுவதற்கு காரணமான நபி இப்றாஹீம் (அலை) அவர்களது தியாகம் நிறைந்த வாழ்க்கை வரலாறு  உலக மக்களுக்கு பெரும் படிப்பினையாக உள்ளது. அவர்களது குடும்பத்தின் தியாக வரலாற்றை நாமும் பின்பற்ற வேண்டும். இப்றாஹீம் (அலை) அவர்கள்   தனது முதிய   வயதில் இறைவனிடம் துஆ கேட்டு பெற்றுக் கொண்ட தனது பிள்ளை இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்து பலியிடுமாறு கட்டளை இட்டான் அந்த இறை கட்டளைக்கு அடிபணிந்து தந்தை இப்றாஹீம் (அலை) எந்தத் தந்தையும் செய்ய விரும்பாத ஒரு காரியமான தனது மகனை அறுத்து பலியிட துணிந்தார்கள். 

இதனை தனது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் கூறியபோது இறை கட்டளை என்றால் அதனை நிறைவேற்றுங்கள் எனக் கூறினார்கள். இது அவர்களின் இறையச்சத்தை வெளிப்படுத்துகின்றது. இறுதியில் இறைவன் உமது இறையச்சத்தை சேதிப்பதற்காகவே அவ்வவாறு கட்டளையிட்டதாக கூறி அவர்களை பொருந்திக் கொண்டு அதற்குப் பகரமாக மிருகங்களை அறுத்து தங்களின் கடமையை நிறைவேற்றுமாறு பணித்தான். அந்தத் தொடரில்தான் தற்போது நாம் உழ்ஹிய்யா கட்மையை நிறைவேற்றுகின்றோம்.

இதுவே உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியான வாழ்க்கைமுறையாகும். இதனை படிப்பினையாகக் கொண்டு நாமும் வாழக்கையில் இறை கட்டளையை ஏற்று  நடக்க வேண்டும். என்றும் இஸ்லாமிய  கற்றுத்தந்த அடிப்படையில் நாம் இப்பெருநாளை கொண்டாடுவோம் என்றும் குத்பா பிரசங்கத்தில் குறிப்பிட்டார். (எஸ்.அஷ்ரப்கான்)பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத்த ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை பறகஹதெனிய அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூர்p மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட தொழுகை மற்றும் மார்க்கச் சொற்பொழிவை அஷ்ஷெய்க் எம். சீ. எம். அன்சார் ரியாதி நடத்தியதையும் பெரு எண்ணிக்கையிலான ஆண் பெண் இரு பாலாரும் கலந்து கொண்டதையும் படங்களில் இங்கு காணலாம்.  

இக்பால் அலிபாறுக் ஷிஹான்

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை யாழில் இரு வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில்   முஸ்லிம் வட்டார மக்களுக்கான பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில் நடைபெற்றது. அத்துடன் யாழ்ப்பாணம் பூங்காவிற்கு முன்னால் இருக்கும் யாழ் மாநகர மைதானத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெருநாள் தொழுகை அஷ்-ஷெய்க் பைசல் (மதனி)  தலைமையில் நடைபெற்றது.

இப்பெருநாள் தினமானது இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

வசதிபடைத்த முஸ்லிம்கள்இ இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவார்கள்.

உலகின் சகல பாகங்களில் இருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா மாநகரில் மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து இலட்சக் கணக்ககானவர்கள் ஒன்றுகூடி ஹஜ் வழிபாடுகளில் ஈடுபடுவது இந்த தினத்தின் விசேட அம்சமாகும்.


சாய்ந்தமருதில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும்

(ஹாசிப் யாஸீன்)

சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் கடற்கரை முன்றலில் இன்று (12) திங்கட்கிழமை ஹஜ் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இடம்பெற்றன.

ஹஜ் பெருநாள் குத்பா பிரசங்கத்தினை மௌலவி ஏ.கலிலுர் ரஹ்மான் நிகழ்த்தினர்.
இதில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இதே சமயம் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் அதன் கீழுள்ள மாளிகைக்காடு மஸ்ஜிதுல் அந்நூர், மஸ்ஜிதுல் சாலிஹீன், மஸ்ஜிதுல் அக்பர், மஸ்ஜிதுல் தக்வா ஆகிய ஜூம்ஆப் பள்ளிவாசல்களிலும் ஹஜ் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இடம்பெற்றன.

சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் குத்பா பிரசங்கத்தினை பேஷ் இமாம் மௌலவி ஏ.ஆதம்பாவா நிகழ்த்தினார்.

இதிலும் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
 

- ஜே.எம்.ஹபீஸ்-

மடவளை ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளியில் இடம் பெற்ற புனித ஹஜ் பெருநாள் தொழுகையின் போது எடக்கப்பட்ட படம். 


ஸ்ரீலங்கா  தெளஹீத்  ஜமாஅத்  மடவளை கிளை ஏற்பாட்டில் மடவளையில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை..- ஜே.எம்.ஹபீஸ்-
ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமாஅத்தின் அக்குறணை கிளையின் ஏற்பட்டில் (12.9.2016) அக்குறணை பூட்சிடி முற்றவெளியிள் புனித ஹஜ் பெருநாள் சொற்பொழிவு மற்றும் தொழுகை  இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படம்


-ஜே.எம்.ஹபீஸ் -

அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்ற ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகையின் போது எடுக்கப்பட்ட படம்.முஹம்மட் சியான்- 

இன்று (12.09.2016) காலை 6.15 மணியளவில் அக்கரைப்பற்று  பொது விளையாட்டு மைதானத்தில் ஈத்துல்அழ்ஹா பொருநாள் திடல் தொழுகை அப்துல் ஹமீத் ஷரயினால் நடாத்தப்பட்டது.

இம்முறை வழமையை விட அதிகமாகவும் சுமார் 6000 ற்கும் மேற்பட்ட மக்கள் இத்திடலில் நபிவழியில் தொழுவதற்காக சமூகமளித்தனர்.

Mohamed Siyan


சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்மஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கடற்கரைத் திடலில் நடைபெற்ற புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் இதில் பங்குகொண்டனர். தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் அபூஹனான் ஸலபி அவர்கள் நடாத்தி வைத்தார்கள்.

AK. Rahman -


மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை
(பி.எம்.எம்.ஏ.காதர்) 
புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று (12-09-2016) மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்   இதில் பெரும் தொகையான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.( படங்கள் இணைப்பு ) இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிகழ்வுகள். ( படங்கள் இணைப்பு ) இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிகழ்வுகள். Reviewed by Madawala News on 9/12/2016 12:51:00 PM Rating: 5