Oceas

கண்டி, மடவளை ஹில்கன்ட்றி சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா. (படங்கள்)



கண்டி, மடவளை  ஹில்கன்ட்றி சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் Diploma in Teacher Education  Course இனை நிறைவு செய்த 8 பேருக்கான விருது வழங்கும் விழாவும் மிக விமர்சையாக அஷ்ரப் கேட்போர் கூடத்தில் 22.09.2016 அன்று நடைப்பெற்றது.

இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக பேராசிரியர் எம்.எம்.எம் நாஜிம்  B.Sc., M.Eng.  கலந்து கொண்டார். அங்கு இடம் பெற்ற கலை நிகழச்;சியையும் பேராசிரியர் பரிசு வழங்குவதையும் படங்களில் காணலாம்.

மேற்படி விழாவில்  பேராசிரியர் எம்.எம்.எம் நாஜிம் உரையாற்றும் போது அவர் தனது இலட்சியத்தை அடைவதற்கு உறுதுணையாக இருந்த மூன்று விடயங்களைப் பற்றி விளக்கம் அளித்தார்.

1. நேரத்தைப் பேணி நேரத்திற்கு வேலை செய்யும் பண்பு
2. தூய்மையான உளப்பாங்கு
3. கடுமையான உழைப்பு
இவை மூன்றுடன் இலட்சியத்தை நோக்கிய கனவு அத்தியவசியம் என்பதைக் குறிப்பிட்டதோடு  தனது வாழ்வில் தான் எட்டு வருடங்களுக்கு முன் பல்கலைக்கழக துணை வேந்தராக வர வேண்டும் என்ற கனவை தற்போது அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அத்தோடு எமது பாடசாலையும் நேரத்தைப் பேணுவதாகவும்,இவ்விழாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்த அனைவரும் மிக மகிழ்ச்சி அடைந்தார்கள்.













கண்டி, மடவளை ஹில்கன்ட்றி சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா. (படங்கள்) கண்டி, மடவளை ஹில்கன்ட்றி சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா. (படங்கள்) Reviewed by Madawala News on 9/24/2016 04:32:00 PM Rating: 5