முன்னாள் ஆங்கில ஆசிரியர் A L I இஜாபதுல்லாஹ் (நஜ்முத்தீன்) காலமானார்.



அஸ்ஸலாமு அலைக்கும்

ஜனாஸா அறிவித்தல்

முன்னாள் ஆங்கில ஆசிரியர் A L I இஜாபதுல்லாஹ் (நஜ்முத்தீன்) அவர்கள் நேற்று சனிக்கிழமை (24 செப்டெம்பர் 2016) அன்று இரவு 9:30 மணியளவில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

கல்முனைக்குடியைப் பிறப்பிடமாகவும்  சாய்ந்தமருது-5 P M வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் ஆங்கில ஆசிரியர் A L I இஜாபதுல்லாஹ் (நஜ்முத்தீன்) அவர்கள் நேற்று சனிக்கிழமை (24 செப்டெம்பர் 2016) அன்று இரவு 9:30 மணியளவில் காலமானார்கள்.

அன்னார், காலம் சென்ற அகமது லெப்பை ஆலிம் (வாழைக்காய் ஆலிம்) மற்றும் ஆயிஷா உம்மா ஆகியோரின் அன்பு மகனும்
உதுமானாச்சி (ரய்ஹானா) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னார், அண்மையில் நெதர்லாந்தில் காலம் சென்ற ALM அப்துல் கஃபூர் (ஸைபுத்தீன்), ஸாஹிர் (மஸ்ஹூல்), மஷூல் (ஹக்கீம்) மற்றும் காலம் சென்ற ஸல்மா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவர் காலம் சென்ற கல்முனைக்குடி ஷேகு இப்றாஹிம் மெளலவி (சாச்சா), காலம் சென்ற யாஸீன் (சாச்சா), காலம் சென்ற ஆசிரியர் அப்துல்லாஹ் (மாமா), காலம் சென்ற அப்துல் ஹமீத் (மாமா) மற்றும் காலம் சென்ற மூத்தம்பி ஆலிம் (பாட்டனார்) ஆகியோரின் குடும்பத்தவரும் ஆவார்.

அன்னார் அப்துல்லாஹ் (சுஜா), ஆயிஷா (றோசி), உபைதுல்லாஹ் (சஜா), ஜாயிஷா, ஹிபதுல்லாஹ் (ரஜா), ஷிஃபதுல்லாஹ் (நஜா), றயீஸா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

மேலும் ஆசாத் காமில், மனாஸிர், செறோபா, சுஹா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

மேலும் முஸ்தபா, அலியார் (சின்னவன்), நிசார் (பஸீர்) ஆகியோரின் மச்சானும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 07:30 மணிக்கு சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இதனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

அறிவிப்போர்: குடும்பத்தினர்.

முன்னாள் ஆங்கில ஆசிரியர் A L I இஜாபதுல்லாஹ் (நஜ்முத்தீன்) காலமானார். முன்னாள் ஆங்கில ஆசிரியர் A L I இஜாபதுல்லாஹ் (நஜ்முத்தீன்) காலமானார். Reviewed by Madawala News on 9/25/2016 08:36:00 AM Rating: 5