ஜெயலலிதா தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது அப்போலோ மருத்துவமனை.



தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி இரவு சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.


இந்நிலையில் 29ம் தேதி மாலை முதலே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பலவித தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அறிக்கையை 29ம் தேதி இரவு வெளியிட்டது.

அந்த அறிக்கையில், "காய்ச்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே முதல்வரின் உடல்நிலை குறித்து வீண் வதந்திகளை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், "தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் பூரண உடல்நலத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரிரு தினங்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார். மக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். வீண் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
ஜெயலலிதா தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது அப்போலோ மருத்துவமனை. ஜெயலலிதா தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி  வைத்தது அப்போலோ மருத்துவமனை. Reviewed by Madawala News on 9/30/2016 06:37:00 AM Rating: 5