Free Space

(படங்கள்) கல்முனையில் ஆர்பாட்டம் .



-ஏ.பி.எம் அஸ்ஹர்.

கல்முனை மாநகர ஆணையாளரை அவமானப்படுத்தியவரை உடன் கைது செய்யுமாறு கோரி மாநகர சபை  ஊழியர்கள் இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி மோட்டார் சைக்கில் வர்த்தகர் ஒருவரால் அகொ ளரவப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் இது வரை சம்பந்தப்பட்ட வர்ததகருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படாததைக்கண்டித்தே இக்க வன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற்து.

மாநகர சபையிலிருந்து ஊர்வலமாக சென்றஆர்பாட்டக்காரர்கள் கல்முனை பொலிஸ் நிலையம் ஊடகச் ஊர்வலமாகச் சென்று  கல்முனை நகர் ஊடாக மீண்டும் மாநகர சபை வந்தடைந்தனர்.இதனால் மாநகர சபை அலுவலக செயற்பாடுகள இன்று சீராக நடை பெற்வில்லை.

அத்துடன் கல்முனை பிரதேசத்தில் கழிவகற்றல் நடவடிக்கைகளும் இடம் பெறவில்லை.இதே வேளை இன்று மாலை நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.






(படங்கள்) கல்முனையில் ஆர்பாட்டம் . (படங்கள்) கல்முனையில் ஆர்பாட்டம் . Reviewed by Madawala News on 9/05/2016 11:02:00 AM Rating: 5