Accaddemy

வழக்கு விசாரணை முடிந்து வெளியில் வந்த மூவரை வெள்ளை வேனில் கடத்தியதால் பரபரப்பு.



யாழ். நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகி, பின்னர் வெளியில் வரும்போது வெள்ளை வேனில் வந்தவர்கள், மூவரை பலவந்தமாக பிடித்து இழுத்து வானுக்குள் பலவந்தமாக தள்ளி , ஏற்றிக்கொண்டு சென்றமையால் அந்த வளாகத்தில் ஒருவகை பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் பின்னர், யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு,  யாழ். நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.

 குறித்த வழக்கு விசாரணையில் 74 பேர், நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

அவ்வாறு ஆஜராகிவிட்டு, நீதிமன்றத்தை விட்டுவெளியேறும் போதே, வெள்ளை வானில் வந்தவர்கள், மூவரை மட்டும் பிடித்து இழுத்து வெள்ளை வானுக்குள் தள்ளி ஏத்தி, தலைமறைவாகியுள்ளனர்.
வழக்கு விசாரணை முடிந்து வெளியில் வந்த மூவரை வெள்ளை வேனில் கடத்தியதால் பரபரப்பு. வழக்கு விசாரணை முடிந்து வெளியில் வந்த மூவரை வெள்ளை வேனில் கடத்தியதால்  பரபரப்பு. Reviewed by Madawala News on 9/13/2016 02:28:00 PM Rating: 5