நேற்று நுவன் குலசேகரவின் காரில் மோதி உயிரிழந்த தினேஷ் அரவிந்த யார்? வெளிவராத சில தகவல்கள்.



- Hassim Mohamed Naleem-

நேற்றைய தினம் கொழும்பிலிருந்து நிட்டம்புவ நோக்கி மோட்டார் சைக்கிலில் சென்றுகொண்டிருந்து வாலிபர் ஒருவர் எதிர்பாராத விதமாக பாதையிலிருந்து விலகிச்சென்று விழுந்த போது நுவன் குலசேகரவினால் செலுத்தப்பட்ட வண்டியில் மோதுண்டு துரதிஷ்டவசமாக உயிர் துறந்தது அறிந்ததே..

கொழும்பு கண்டி பிராதான வீதியில் கிரில்லவல ரன்முதுகல பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிட்டம்புவ, மாயிம்புல பிரதேசத்தில் வசித்துவந்த தினேஷ் அரவிந்த என்ற 28 வயதுடைய வாலிபரே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் பின்னர் கொல்லப்பட்ட நபரின் உறவினர் ஒருவரின் முகப்புத்தக கணக்கில் சில புகைப்படங்களுடன் பதிவொன்று இடப்பட்டிருந்தது.

தினேஷ் அரவிந்த மற்றும் நுவன் குலசேகர ஆகியோர் ரன்பொகுனுகம நகரில் ஒன்றாக கிரிகெட் விளையாட்டில் ஈடுபட்டவர்கள் எனவும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக பழக்கப்பட்டவர்கள் எனவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தனிப்பட்ட முறையில் இவ்விருவரும் நெருங்கிய நண்பர்கள் என இச்சம்பவம் நடந்த சமயம் அவ்விடத்தில் இருந்த ஒருவர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.

நுவன் குலசேகர நிட்டம்புவ, ரன்பொகுனுகம நகரில் வளர்ந்தவர் மேலும் அவர் ரன்பொகுனுகம மஹா வித்தியாலயத்தில் முதன்மைக்கல்வியை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

14433135_1249334031764127_2307009063892976240_n


நேற்று நுவன் குலசேகரவின் காரில் மோதி உயிரிழந்த தினேஷ் அரவிந்த யார்? வெளிவராத சில தகவல்கள். நேற்று நுவன் குலசேகரவின் காரில் மோதி உயிரிழந்த தினேஷ் அரவிந்த யார்? வெளிவராத சில தகவல்கள். Reviewed by Madawala News on 9/20/2016 02:31:00 PM Rating: 5