லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் சற்றுமுன்னர் தோண்டி யெடுக்கப்பட்டது.



படுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், ஐந்தரை வருடங்களின் பின்னர்,இன்று செவ்வாய்க்கிழமை (27) சற்று முன்னர் தோண்டியெடுக்கப்பட்டது.

கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் சஹாப்டீன் விடுத்த உத்தரவிற்கமைய இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்கவின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நீதவான் மொஹமட் சஹாப்டீன் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் சற்றுமுன்னர் தோண்டி யெடுக்கப்பட்டது. லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் சற்றுமுன்னர் தோண்டி யெடுக்கப்பட்டது. Reviewed by Madawala News on 9/27/2016 09:16:00 AM Rating: 5