Ad Space Available here

லசந்தவின் கொலையுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாவுக்கு உள்ள தொடர்பை தெரிந்து கொண்டது எப்படி?(எம்.எப்.எம்.பஸீர்)
சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் கொலை­யுடன் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு தொடர்­பி­ருக்­கின்­றது என்­பதை எவ்­வாறு அறிந்­து­ கொண்டாய் என லசந்­தவின் சார­தி­யான டயஸ் என்­ப­வரை கடத்தி, தற்­போது கைது செய்­யப்பட்­டுள்ள இரா­ணுவ புல­னாய்வு வீர­ரான பிரே­மா­நந்த உட­லா­கம விசா­ரணை செய்­துள்­ள­தாக குற்ற‌ப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த நிலையில் சந்­தேக நபரின் இந்த நட­வ­டிக்கை, லசந்­தவின் கொலை மற்றும் அத­னுடன் சந்­தேக நப­ருக்கு உள்ள தொடர்பு உள்­ளிட்ட பல விட­யங்கள் குறித்து பாரிய சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு நேற்று கல்­கிசை நீதிமன்­றுக்கு அறி­வித்­தது.

லசந்த படு­கொலை விவ­கார வழக்கு நேற்­றைய தினம் கல்­கிசை பிர­தான நீதிவான் மொஹம்மட் சஹாப்தீன் முன்­னி­லையில், விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­கா­ரி­க­ளான உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சகர் திசேரா மற்றும் பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த சில்வா ஆகியோர் மன்றில் ஆஜ­ராகி மேற்­படி விட­யத்தை மன்றின் கவ­னத்­துக்கு கொண்­டு­ வந்­தனர்.


அத்­துடன் விசா­ர­ணை­க­ளுக்கு தேவை­யான கொஹு­வலை இரா­ணுவ புல­னா­ய்வு முகாமின் ஆவ­ணங்கள் காணாமல் போனமை தொடர்பில் நீதி­மன்ற உத்­தர­வுக்கு அமை­வாக இரா­ணுவ தள­ப­தி­யினால் அமைக்­கப்பட்ட இரா­ணுவ நீதி­மன்றின் விசாரணை அறிக்­கையும் நேற்று நீதிமன்­றுக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளது. அதன்­படி காணாமல் போன ஆவ­ணங்கள் பல­வற்­றுக்கு சந்­தேக நப­ரான பிரே­மா­நந்த உட­லா­க­மவே பொறுப்புக் கூற வேண்டும் என இரா­ணுவம் முடிவு செய்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது.

 லசந்த படு­கொலை விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று நண்­பகல் 12.00 மணிக்கு கல்­கிசை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன் போது கைதா­கி­யுள்ள சந்­தேக நப­ரான இரா­ணுவ புல­னாய்வு வீரர் பிரே­மா­னந்த உட­லா­கம சிறைச்­சா­லைகள் அதி­கா­ரி­களால் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டார்.

விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சகர் திசே­ராவும் சிற‌ப்பு விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த சில்­வாவும் ஆஜ­ரா­கினர். பாதிக்­கப்­பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அதுல எஸ். ரண­க­லவும், சந்­தேக நபர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளின் இந்­திர திஸ்­ஸவும் மன்றில் ஆஜ­ரா­கினர்.


வழக்கு விசா­ரணை ஆரம்­ப­மான போது நீதி­வா­னிடம் மேல­திக விசா­ரணை அறிக்­கையை, பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா சமர்­ப்பித்­த­துடன், உதவிப்பொலிஸ் அத்­தி­யட்சகர் திசேரா நீதி­மன்­றுக்கு கருத்து தெரி­வித்தார்.

நீதி­மன்றம் கடந்த தவ­ணையில் விடுத்த உத்­த­ர­வுக்கு அமைய லசந்த விக்­கி­ர­ம­துங்­கவின் சடலம் கொழும்பு மேல­திக நீதிவான் மொகமட் மிஹால் முன்­னி­லையில் தோண்டி எடுக்­கப்­பட்­ட­தா­கவும் இதன்­போது புதிய பிரேத பரி­சோ­த­னையை முன்­னெ­டுக்­கவுள்ள கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி அஜித் தென்­னக்கோன், கண்டி பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி சிவ­சுப்­பி­ர­ம­ணியம், கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் பேரா­சி­ரியர் வைத்­தியர் ஜின் பெரேரா ஆகி­யோரும் நட­வ­டிக்­கை­களை நெறிப்­ப­டுத்­தி­ய­தா­கவும் அவர் தெரி­வித்தார்.


இதனை விட பல்­வேறு சாட்­சி­யங்கள் சடலம் மீளத்தோண்டி எடுக்­கப்­ப­டும் ­போது பதிவு செய்­யப்­பட்­ட­தா­கவும் அவர்­களில் குடும்ப உறுப்­பி­னர்கள், பொலிஸ் அதி­கா­ரிகள், பொரளை மயா­னத்தின் ஊழி­யர்கள் உள்­ளிட்டோர் அடங்­கு­வ­தா­கவும் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் திஸேரா குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து நீதி­வானின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­த­தா­வது, லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை தொடர்பில் மரு­தானை திரிப்­பொலி இரா­ணுவ புல­னாய்வு முகாமின் 35 இரா­ணுவ உத்­தி­யோ­கத்­தர்­களும் கைவிரல் ரேகை அடை­யா­ளமும் கையெ­ழுத்­துக்­களும் விசா­ர­ணைக்­காக எம்மால் பெறப்­பட்­டுள்­ளன.

அவை தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். அத்­துடன் விசா­ர­ணை­க­ளுக்குத் தேவையான மேலும் சில தொலை­பேசி இலக்­கங்கள் தொடர்பில் அறிக்கை பெற்றுக் கொள்ள ஐந்து தொலை­பேசி சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு உத்­த­ர­வி­டு­மாறு கோரு­கின்றோம்.

இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நப­ரான பிரே­மா­னந்த உட­லா­கம எனும் புல­னாய்வு வீரர் லசந்­தவின் கொலை இடம்­பெற்ற ஜன­வரி 8 ஆம் திகதி எங்­கி­ருந்தார் என்­பது குறித்து அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

பிரே­மா­னந்த உட­லா­க­ம­வுக்கு இரா­ணு­வத்­தி­னரால் வழங்­கப்­பட்­டி­ருந்த 0772361948 எனும் தொலை­பேசி இலக்­கத்­தையே அவர் பயன்­ப­டுத்தி வந்­துள்ளார்.

சம்­பவ தினம் குறித்த தொலை­பே­சி­யா­னது அறி­வியல் ரீதி­யான சான்­று­களின் பிர­காரம் மாத்­தளை பகு­தியில் இருந்­தமை உறு­தி­யா­கியுள்­ளது. எனினும் பிரே­மா­னந்த உட­லா­கமே எனும் சந்­தேக நபர் இதன்­போது மாத்­த­ளையில் இருந்தார் என்­பதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

தொலை­பேசி இலக்கம் மாத்­த­ளையில் இருந்­தது என்­பதை அடிப்­ப­டை­யாக கொண்டு மட்டும் அவ்­வா­றா­ன­தான ஒரு முடி­வுக்கு எம்மால் முடி­யாது. இந்த வழக்கின் குறித்த ஒரு விடயம் தொடர்­பி­லான சாட்­சி­யா­ள­ரான லசந்த விக்­கி­ர­ம­துங்­கவின் சாரதி டயஸ் என்­ப­வ­ரிடம் நாம் மேல­திக வாக்­கு­மூலம் ஒன்­றிணை பெற்­றுள்ளோம்.

இத­னூ­டாக சந்­தேக நப­ரான உட­லா­கம லசந்­தவின் சாரதி டயஸை கடத்திச் சென்று செய்த உயிர் அச்­சு­றுத்தல் தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. டயஸைக் கடத்திச் சென்­றுள்ள சந்­தேக நபர் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் லசந்த விவ­கா­ரத்­துடன் தொடர்பு பட்­டி­ருப்­பதை நீ தெரிந்து கொண்­டது எப்­படி என மிரட்டி விசா­ரணை செய்­துள்ளார்.


இதன்­போது சந்­தேக நபர் குரல் பதி­வொன்­றி­னையும் சாட்­சி­யா­ள­ரான டய­ஸுக்கு செவி­ம­டுக்க கொடுத்­துள்ளார். அதில் டயஸின் குரலை ஒத்த குரல் ஒன்று பதி­வா­கி­யி­ருந்­த­தாகவும் "எங்கள் சேரை கொன்­றது வேறு யாரும் அல்ல, கோத்­தாவே தான்" என பதி­வா­கி­யி­ருந்­த­தாகவும் சாட்­சி­யாளர் எமக்­க­ளித்த வாக்குமூலத்தில் தெரி­வித்­துள்ளார்.

அந்த குரல் பதி­வினை காட்டி மிரட்­டி­யுள்ள சந்­தேக நபர் இந்த விட­யத்தை இனிமேல் எங்­கா­வது தெரி­வித்­தி­ருந்தால் கொன்று விடு­வ­தாக மிரட்­டி­யுள்ளார். அத்­துடன் கடத்­தப்­பட்­டமை தொடர்பில் வெளியே சொன்னால் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையை கைவி­டு­மாறும் அவர் மிரட்­டி­யுள்ளார்.

இதன்­பின்னர் லசந்­தவின் சாரதி தனது இருப்­பி­டங்­களை மாற்றி பல இடங்­களில் தற்­கா­லி­க­மாக இருந்து வந்­துள்ளார். இறு­தி­யாக பண்­டா­ர­கம பகு­திக்குச் சென்று வெளித் தொடர்­புகள் எது­வு­மின்றி தனி­யாக வாழ்ந்­துள்ளார். இந்­நி­லை­யி­லேயே குற்றப் புல­னாய்வு பிரி­வினர் சாட்­சி­யா­ளரை கண்­டு­பி­டித்து விசா­ரணை செய்து மேற்­படி விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.


சந்­தேக நப­ரான உட­லா­கம சாதா­ரண இரா­ணுவ வீர­ராக இருந்­த­ போதும் அவ­ருக்கு விசேட வரப் பிர­சா­தங்கள் கிடைத்­துள்­ளன. இவை ஏன் அவ­ருக்கு கிடைத்­தன. என்­பது பாரிய சந்­தே­கங்­களை உரு­வாக்­கு­கின்­றது.

2010 ஆம் ஆண்டு உட­லா­கம ஜேர்­ம­னி­யி­லுள்ள இலங்கை தூத­ர­கத்தின் பாது­காப்பு தொடர்­பி­லான பத­வி­யொன்­றுக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். முதலில் அவ்­வா­றா­னதொரு பதவி இரா­ஜ­தந்­திர சேவையில் இல்லை என்­பதை காரணம் காட்டி அவ­ரது நிய­ம­னத்தில் வெளிவி­வ­கார அமைச்சு நிரா­க­ரித்­துள்­ள­துடன், பின்னர் அவ்­வா­றா­ன­தொரு பதவி உரு­வாக்­கப்­பட்டு உட­லா­கம அப் பத­வியில் அமர்த்­தப்­பட்­டுள்ளார்.

சில வரு­டங்­களில் அவரின் மனைவி, இரு பிள்­ளைகளையும் ஜேர்­ம­னிக்கு அழைத்து கொள்ள உட­லா­கம வெளி­வி­வ­கார அமைச்சை நாடி­யுள்ளார். இதன்­போது வெளிவி­வ­கார அமைச்சு அவ­ரது கோரிக்­கையை நிரா­க­ரித்­துள்­ளது. எனினும் அவர்­களை அங்கு அனுப்பி வைக்க அமைச்­சுக்கு உத்­த­ர­வொன்று பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பி­லான ஆவ­ணங்கள் தற்­போது எமக்கு கிடைத்­துள்­ளன.

என­வேதான் சாதா­ரண இரா­ணுவ வீர­ரான உட­லா­க­ம­வுக்கு வழங்­கப்­பட்ட வரப் பிர­சா­தங்கள் குறித்து சந்­தே­கங்கள் எழு­கின்­றன. இந்த நீதி­மன்றின் உத்­த­ர­வுக்கு அமைய விசா­ர­ணைக்­குத் தேவை­யான ஆவ­ணங்கள் பல புல­னாய்வு முகா­மி­லி­ருந்து காணா­மல்­போ­னமை தொடர்பில் இரா­ணுவத் தள­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட இரா­ணுவ நீதி­மன்றின் அறிக்கை தற்­போது கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. அதன் 99 ஆவது பக்­கத்தில் தீர்­மா­னங்கள் குறித்து குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. அதன்­படி குறித்த புல­னாய்வு இரா­ணுவ முகா­மா­னது இரா­ணு­வத்­தி­னரின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அப்பால் சென்று செயற்பட்டுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இரண்டாவது தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனை விட ஆவணங்கள் காணாமல் போனமைக்கும் சந்தேக நபரான உடலாகமவே முழுப்பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என இராணுவ நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த புலனாய்வு முகாமில் ஆயுதப் பயன்பாடு, தொலைபேசி பதிவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுக்கு சந்தேக நபரே பொறுப்பாக இருந்து ள்ளமையும் இராணுவ நீதிமன்ற விசார ணையில் உறுதியாகியுள்ளது. சந்தேக நபருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையும் 32 ஆவது அத்தியாயத்துடன் இணைத்துக் கூறப்படும் 213, 343, 356, 357, 359, 140 ஆகிய அத்தியாயங்களின் பிரகாரம் குற்றச்சாட்டு உள்ளது.

எனவே சந்தேக நபருக்கு பிணை வழங்கினால் விசாரணைகள் பாதிக்கப்படும். 1997 ஆம் ஆண்டின் பிணை சட்டத்தின் 14 ஆம் அத்தியாயத்திற்கு அமைவாக சந்தேக நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோருகிறேன் என்றார்.

லசந்தவின் கொலையுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாவுக்கு உள்ள தொடர்பை தெரிந்து கொண்டது எப்படி? லசந்தவின் கொலையுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாவுக்கு உள்ள தொடர்பை தெரிந்து கொண்டது எப்படி? Reviewed by Madawala News on 9/30/2016 11:51:00 AM Rating: 5