ஒரு கோடி ரூபா பணத்துடன் காணாமல் போயுள்ள வர்த்தகர் மொஹமட் நஸ்ரின். தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்.



பண்டாரகம, அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மொஹமட் நஸ்ரின் என்னும் வர்த்தகர் காணாமல் போயுள்ள்ள நிலையில் அவரின் புகைப்படம் வெளியாகி உள்ளதுடன்  அவரின் தகவல் தெரிந்தால் 077 177 0222 என்ற இலக்கத்துக்கு  அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

கந்தளாய் ஹோட்டல் ஒன்றில் குறித்த வர்த்தகர் நேற்று தங்கியிருந்துள்ளதாகவும் வங்கியொன்றில் இடம்பெற்ற தங்க நகை ஏலவிற்பனைக்கு குறித்த வர்த்தகர் சென்றுள்ளதாகவும் அவரிடம் சுமார் ஒரு கோடி ரூபா பணம் இருந்துள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகருடன் எவ்வித தொடர்புகள் இதுவரை கிடைக்காததால் அவர் காணாமல் போயிருக்கலாம் என அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி ரூபா பணத்துடன் காணாமல் போயுள்ள வர்த்தகர் மொஹமட் நஸ்ரின். தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்.  ஒரு கோடி ரூபா பணத்துடன்  காணாமல் போயுள்ள  வர்த்தகர் மொஹமட் நஸ்ரின். தகவல் தெரிந்தால்  அறிவிக்கவும். Reviewed by Madawala News on 9/05/2016 12:27:00 PM Rating: 5