சுயநலம் பிடித்த பூனைகளாகிப்போன எங்கள் புலிகள் ..




இரு பெரும் யுத்தங்களில் படுதோல்வியை கண்ட பிரிட்டிஷ் அரசு முக்கிய பிரதேசங்களை இழந்து தலையை சொறிந்து கொண்டிருந்த நேரம் ..
திப்பு சுல்தான் என்ற அந்த மாவீரன் சூரியன் மறையாத சாம்ராஜ்யத்துக்கே தண்ணீர் காட்டி விட்டானே என்ற ஆத்திரத்தில் பெரும்படைகளை திரட்டிக்கொண்டு தீவிரமாக அடுத்த யுத்தம் ஒன்றுக்கு பிரிட்டன் தயாராகி கொண்டிருந்தது .

"தோல்வியே காணாத பிரிட்டிஷ் படைகள்  எப்படி தோல்விகளை தொடராக கண்டு கொண்டிருக்கின்றன .." தீவிர ஆராய்ச்சியில் பிரிட்டனின் இராணுவ ஆலோசகர்கள் ..

தோல்விக்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன அதில் ஒன்று ,
என்றுமே பயன்படுத்தப்படாத புதிய ரக
ரொக்கட்  என்கிற தொழிநுட்பத்தை திப்பு  பயன்டுத்துகிறார்  என்பதுதான் ..
ஆம் இன்றைய ஏவுகணை தொழிநுட்ப முன்னோடி யாருமல்ல 1770 ளில் அதை
இந்தியாவில் பயன்படுத்திய அந்த திப்பு சுல்தான்தான் ..

பிரிட்டிஷ் படைகளின்  பாரிய யுத்த தந்திரத்தை அறிந்து கொண்ட திப்பு உதவி கேட்டு  கடிதம் எழுதுகிறார் அப்போதைய உஷ்மானிய சாம்ராஜ்ஜிய தலைமை பிரதேசமான துருக்கிக்கு ....
உதவிக்கு பதிலாக அன்பளிப்பு பொருட்களுடன்  தூதுவர் திரும்பி வருகிறார் ..
"துருக்கி ரஷ்யாவுடன் போர் தொடுக்கிற நிலையில உள்ளது . அந்த போருக்கு பிரிட்டனை உதவிக்கு நாடி உள்ளது . தங்களுக்கு உதவி செய்தால் பிரிட்டனை பகைக்க வேண்டி வரும் .மன்னிக்கவும் " அதுதான் உஷ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் பதில் .

1799 இல் நான்காவது மைசூர் யுத்தம் வெடிக்கிறது .50 ஆயிரம் பெரும் படையுடன் பிரிட்டன் திப்பு சுல்தானை முறியடிக்க களம் இறங்குகிறது . தலைநகர் ஸ்ரீ ரங்க பட்டினம்  முற்றுகைக்கு உள்ளாக்குகிறது .கடும் சமர் வெடிக்கிறது . பெரும்படை வருவதால் அங்கிருந்து தப்பி ஓடுமாறு பிரான்ஸ் திப்புவுக்கு தகவல் அனுப்புகிறது .

"நூறு நாட்கள் குள்ள நரியாக வாழ்வதை விட ஒருநாள் புலியாக வாழ்வது மேல் "என்று பிரான்சுக்கு மைசூரின் புலி திப்பு சுல்தான் பதில் அனுப்புகிறார் .
யுத்தத்தில் ஷஹீதாக்கப்படுகிறார் திப்பு சுல்தான் .
இன்னும் நூறு வருடங்களுக்குள் சிக்கித்திணறி ,சின்னாபின்னப்பட்டு , சுக்கு நூறாக உடைகிறது ஓட்டோமான் என்கிற   உஷ்மானிய சாம்ராஜ்யம் .

வரலாறு தன்னைத்தானே மீட்டிக்கொள்ளும் என்பதற்கு அமைய  இன்று தாம் உண்டால் , உடுத்தால் , உறங்கினால் , வசதியாக வாழ்ந்தால் போதும் என்று வாழ்கின்ற முஸ்லிம் நாடுகள் அல்லலுறுகிற உம்மாவை கவனிக்க தவறுகிற பட்சத்தில் நாளை
அவர்களது சொந்த அடையாளங்களை தேட வேண்டி இருக்கும் ..

உம்மா என்பது ஒர் உடல் போன்றது .உடலின் ஒரு பாகத்துக்கு
வலி  ஏற்படும் போது முழு உடலும் உணர வேண்டும் -நபிகள் நாயகம் ( ஸல் ) கூறியது சீரியஸாக எடுக்கப்படாமல் விட்டதால்தான் உம்மாவுக்கு இன்று  எத்தனை சோதனைகள் ..

-முஹம்மது ராஜி -
சுயநலம் பிடித்த பூனைகளாகிப்போன எங்கள் புலிகள் .. சுயநலம் பிடித்த பூனைகளாகிப்போன எங்கள் புலிகள் .. Reviewed by Madawala News on 9/18/2016 02:06:00 PM Rating: 5