மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவருக்கு பிணை .



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையிலும் பாதுகாப்பு பிரதான அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை இராணுவத்தின் மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு பிணை வழங்குவதற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, இன்றுப் புதன்கிழமை கட்டளையிட்டார்.

சொத்துக்களை அறிக்கையிடாமை தொடர்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள ஐந்து வழக்குகளிலிருந்தும் அவருக்கு பிணை  வழங்குவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன் அத்துடன் இந்த வழக்கு, ஜனவரி மாம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஐந்து வழக்குகளிலிருந்தும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.

H B றிஸ்வானுஸ் ஸமான்   கொழும்பு.

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவருக்கு பிணை . மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவருக்கு பிணை . Reviewed by Madawala News on 9/28/2016 10:42:00 AM Rating: 5