Free Space

பலஸ்தீன் மாணவர்களுக்கு இலங்கை கல்வி அமைச்சு வழங்கும் புலமைப் பரிசில்கள்.



பலஸ்தீன் மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர்ந்த பல்வேறு துறைகளில் 2017/2016 கல்வி ஆண்டுக்கான புலமைப் பரிசில்கள் இலங்கையில் வழங்கப் படவுள்ளதாக பலஸ்தீன் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு நேற்று வியாழக்கிழமை அறிவித்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமைச்சின் உத்தியோகப் பூர்வ இணையதளமான www.mohe.pna.ps/scholarships ஊடாக ஆர்வமுள்ள மாணவர்கள் விண்னபிப்பதற்கும், இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கான நிபந்தனைகள் மற்றும் மேலதிக விபரங்களை தெரிந்து கொள்வதற்கும் முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நிபந்தனைகள் முழுமை பெறாத எந்த விண்ணப்பமும் ஏற்கப்படமாட்டாது என்பதோடு, எதிர் வரும் வியாழக் கிழமைக்கு 29/9/2016 முன்னதாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும் எனவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. D C
பலஸ்தீன் மாணவர்களுக்கு இலங்கை கல்வி அமைச்சு வழங்கும் புலமைப் பரிசில்கள். பலஸ்தீன் மாணவர்களுக்கு இலங்கை கல்வி அமைச்சு வழங்கும்  புலமைப் பரிசில்கள். Reviewed by Madawala News on 9/23/2016 04:27:00 PM Rating: 5