Free Space

ஒட்டகத்தை அறுப்பதற்க்கு நீதி மன்றம் விதித்த தடையை மதிக்கத் தேவையில்லை. பீ.ஜே ஆவேச உரை.



புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஒட்டகங்களை அறுப்பதற்க்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்பளித்துள்ளது. குறித்த தீர்ப்பு முஸ்லிம்களின் உரிமையை பரிக்கும் செயல்பாட்டின் ஆரம்பம் எனவும் அதனை மதிக்கத் தேவையில்லை என்றும் இன்று சென்னையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் சிறப்புரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மூத்த தலைவரும் பிரபல மார்க்க அறிஞருமான சகோ. பி. ஜைனுலாப்தீன் தெரிவித்துள்ளார்.

மேலும், யார் என்ன சொன்னாலும் ஒட்டகம் அறுப்பவர்கள் அறுக்கத்தான் போகிறார்கள். எது நடந்தாலும் அதனை சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம் என்றும் குறித்த உரையில் அவர் தெரிவித்தார்.

ஒட்டகத்தை குர்பானிக்காக அறுப்பதற்க்கான நீதி மன்றத்தின் தடை என்பது முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாகும்.

ஒட்டகத்தை தான் சாப்பிட வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால் இன்று ஒட்டகத்திற்க்கு தடை, நாளை மாடு வெட்டத் தடை, ஆடு வெட்டத் தடை என்று இவர்கள் தொடரக் கூடாது என்பதற்காகவே "ஒட்டக அறுப்புத் தடையை எதிர்க்கிறோம்"

ஆழம் பார்ப்பதற்காகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. - இதனை கண்டு கொள்ளாமல் இருந்தால், எதிர் காலங்களில் மாடு, ஆடு அறுப்பதற்க்கான தடையையும் தொடருவார்கள்.

இவர்களின் நீதி மன்ற தீர்ப்பை மதிக்கத் தேவையில்லை. இது சட்டத்திற்க்கு புறம்பான தீர்ப்பு.

யார் என்ன செய்தாலும் சரி ஒட்டகம் அறுப்பவர்கள் அறுக்கத்தான் போகிறார்கள். நீ என்ன செய்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் கட்டுப்பட மாட்டோம். சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு சொன்னால் அதற்க்கு கட்டுப்படுவோம்.

மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டு இஸ்லாமிய மார்க்க விஷயத்தில் தலையிடுவதை ஏற்க முடியாது.

சட்டத்தை விட அரசியல் சாசனம் முக்கியமானது. அரசியல் சாசனத்தில் எழுதப்பட்ட விஷயத்தை மீறும் வகையில் சட்டம் இருந்தால், சட்டத்தை கிழித்தெரிய வேண்டும். அரசியல் சாசனத்தை நீக்க முடியாது.

ஒவ்வொருவரும் தனது மதப் பிரகாரம் நடப்பதற்கு உரிமை உண்டு என இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது. அரசியல் சாசனம் தந்திருக்கிற உரிமைகளை எந்த சட்டம் போட்டும் தடுக்க முடியாது.

ஆகவே, இந்தத் தீர்ப்பு கொடூரமானது, தவரானது, இஸ்லாமிய மார்க்கத்துடன் விளையாடும் தீர்ப்பு. இந்திய அரசியல் சாசனத்திற்க்கு எதிரான தீர்ப்பு. இதனை நிராகரிக்க வேண்டும். எது வந்தாலும் துணிந்து எதிர்த்து நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் தடையை மீறி இன்று மக்கள் ஒட்டகத்தை அறுக்கத்தான் போகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என்று தனதுரையில் குறிப்பிட்டார் சகோ. பி. ஜெய்னுலாப்தீன்.

பி.ஜெ ஆற்றிய பெருநாள் சிறப்புரையை காண..

https://www.facebook.com/h2rafeeq/videos/779407455495666/

ஒட்டகத்தை அறுப்பதற்க்கு நீதி மன்றம் விதித்த தடையை மதிக்கத் தேவையில்லை. பீ.ஜே ஆவேச உரை. ஒட்டகத்தை அறுப்பதற்க்கு நீதி மன்றம் விதித்த தடையை மதிக்கத் தேவையில்லை. பீ.ஜே ஆவேச உரை. Reviewed by Madawala News on 9/13/2016 02:20:00 PM Rating: 5