அரச அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? தெளிவான விளக்கம் இதோ.



கேள்வி - அரச அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் பெறுவதற்கும், கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், தேர்தல்களில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கும் முடியுமா?

பதில் - அரச தாபன விதிக்கோவையின் 32 ஆவது அத்தியாயத்தின் படி....

நீதித்துறை உத்தியோகத்தர்
ஆயுதப்படைச் சேவைகளின் உத்தியோகத்தர்
பொலிஸ்படை உத்தியோகத்தர்
கிராம சேவை உத்தியோகத்தர்
சிறைச்சாலை உத்தியோகத்தர்
அரசாங்க சேவையிலுள்ள பதவி நிலை உத்தியோகத்தர்
மேற்பார்வை உத்தியோகத்தர்
தேர்தல்கள் திணைக்களத்தில் (பாராளுமன்ற, உள்ளூராட்சி) பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்
இவர்களுக்கு அரசியல் உரிமைகளை அனுபவிக்க உரிமை கிடையாது. ஆயினும் தேர்தல் ஒன்றில் வாக்களிப்பதற்கு மாத்திரம் முடியும். இதனை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவர்கள் அல்லாத ஏனைய ஊழியர்களுக்கு பின்வரும் உரிமைகளை அனுபவிக்க முடியும்.
அரசியல் கட்சியொன்றில் உறுப்புரிமை பெறுதலும், கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுதலும்
அரசியல் பற்றிய விடயம் தொடர்பில் அபிப்ராயம் தெரிவித்தல்
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மக்கள் தீர்ப்புத் தேர்தல், மாகாண சபைத்தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடல்
மேலதிக தகவல்களை தாபன விதிக்கோவையின் 32 ஆம் அத்தியாயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -
அரச அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? தெளிவான விளக்கம் இதோ. அரச அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? தெளிவான விளக்கம் இதோ. Reviewed by Madawala News on 9/29/2016 01:21:00 PM Rating: 5