Accaddemy

பிரபாகரன் மிக ஒழுக்கமானவர். ஒரு படத்தில் கூட மது கோப்பையுடன் இருப்பதை காண முடியாது. யுத்தமுனை இராணுவ அதிகாரி புகழாரம்.



2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவர் கமல் குணரத்ன. இவர் மீது போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தில் இருந்து கடந்த 5-ம் திகதி ஓய்வு பெற்றார் கமால் குணரத்ன. அவர் தற்போது நந்திக்கடலுக்கான பாதை´ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

இதனிடையே ஊடகம் ஒன்றுக்கு கமல் குணரத்ன அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,

பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் தன்னை சுற்றி கடுமையான ஒழுக்கத்தை கடைபிடித்தார். தற்கொலை படை தாக்குதலை உருவாக்கியவர் அவர்தான். அல்-கொய்தா தற்கொலைபடை குண்டுதாரிக்கு முன்பாகவே பிரபாகரன் 200 தற்கொலைபடை குண்டுதாரிகளை வைத்திருந்தார். பெரும்பாலான தற்கொலைபடை குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர்.

விடுதலை புலிகள் இயக்கத்தில் பெண் விடுதலை புலிகளை தவறாக பயன்படுத்துவது குறித்து எந்த சான்றும் கிடையாது. அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர் பிரபாகரன் அவரது குடும்பத்தினர் மற்றும் விடுதலை புலிகளின் 10 ஆயிரம் புகைப்படங்களை வெளியிட்டனர்.

ஒருபடத்தில் கூட பிரபாகரன் மது கோப்பையுடன் இருப்பதாக காண முடியவில்லை. அவர் ஒழுக்கமான தலைவராக இருந்தார்.

அவர் ஒரு இந்துவாக இருந்தாலும் கடவுளை நம்பவில்லை. அவர் ஒரு உறுதியான முடிவை எடுக்க கூடியவர். கடைசி நிமிட போர் வரையில் பிரபாகரன் தலைமைத்துவம் மிகத்திறமையானதாகவே இருந்தது. இறுதி போரில் கடைசி நிமிடங்கள் வரை விடுதலை புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரபாகரன் மிக ஒழுக்கமானவர். ஒரு படத்தில் கூட மது கோப்பையுடன் இருப்பதை காண முடியாது. யுத்தமுனை இராணுவ அதிகாரி புகழாரம். பிரபாகரன் மிக ஒழுக்கமானவர். ஒரு படத்தில் கூட மது கோப்பையுடன் இருப்பதை காண முடியாது. யுத்தமுனை இராணுவ அதிகாரி புகழாரம். Reviewed by Madawala News on 9/08/2016 09:52:00 AM Rating: 5