Accaddemy

'எழுக தமிழ்' மற்றும் 'கிழக்கின் எழுச்சி' ஆகியவையும் 'சிங்ஹ லே' போன்ற இனவாத தீவி­ர­சக்­திகளே !



வடக்கில் 'எழுக தமிழ்' என்றும்  கிழக்கில் 'கிழக்கின் எழுச்சி' என்றும்   தெற்கில் 'சிங்ஹ லே' என்றும்  வித­வி­த­மான  இன­வாத தீவி­ர­சக்­திகள்  தலை­தூக்க தொடங்­கி­யி­ருக்­கின்­றன என முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீர்­வ­ழங்கல், வடி­கா­ல­மைப்பு மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்­பாக வேண்­டு­மென்று முஸ்லிம் மக்­களை தூண்­டி­விடும் வகை­யி­லான விப­ரீ­தக்­க­ருத்­துக்­களை ஒரு சில தரப்­புக்கள் பரப்பி வரு­கின்­றன என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

கொழும்பு கிங்ஸ்­பெரி ஹோட்­டலில் நேற்­று­முன்­தினம் ஆரம்­ப­மான அரச தனியார் ஒத்­து­ழைப்பு தொடர்­பி­லான மாநாட்டில் கலந்­து­கொண்ட அமைச்சர் ஹக்­கீமை ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் பிரத்­தி­யே­க­மாக சந்­தித்து வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

இதன்­போது அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­ச­பையின்  பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது  இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில்  பேச்­சு­வார்த்­தை­களை   நடத்தி வரு­கி­றது.  குறிப்­பாக அதி­காரப் பகிர்வு குறித்து அத்­தி­யாயம் தொடர்பில் தற்­போது ஆராய்ந்­து­கொண்­டி­ருக்­கின்றோம்.

அதா­வது மாகா­ண­சபை முறை­மையில் ஒத்­தி­யங்கு  நிரலை அகற்­று­வது தொடர்பில்  ஆராய்ந்து வரு­கிறோம். மத்­திய அரசு, மற்றும் மாகாண அர­சாங்­கங்­களின் அதி­கா­ரங்­களை மட்டும் வைத்­தி­ருக்கும் இரண்டு நிரல்­களை வைத்­தி­ருப்­பது தொடர்பில்  ஆராய்ந்து வரு­கிறோம்.  என்னைப் பொறுத்­த­வ­ரையில் இதன்­போது  மாகாண ஆளு­நர்­களின்  அதி­கா­ரங்கள் தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

சிறு­பான்­மை­யி­னங்கள் என்ற அடிப்­ப­டையில் இது தொடர்பில்  நாங்கள் விசே­ட­மாக கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

முன்னர்  வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில்  தொடர்ச்­சி­யாக  இரா­ணுவ அதி­கா­ரி­களே ஆளு­நர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்டு வந்­தனர். ஆனால் அதே பழக்­க­தோ­ஷத்தில் தற்­போது கூட ஆளு­நர்­களின் அதி­கா­ரங்கள் அர்த்­த­முள்­ள­நி­யா­ய­பூர்­வ­மான அதி­காரப் பகிர்வை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றன.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­டு­கின்ற ஆளு­நர்­களின் செயற்­பா­டு­க­ளையும் வடக்கு கிழக்­கிற்கு வெளி­யி­லுள்ள மாகா­ணங்­க­ளுக்கு நிய­மிக்­கப்­படும் ஆளு­நர்­களின் செயற்­பா­டு­க­ளையும்  பார்க்கும் போது  பாரிய வித்­தி­யா­சங்­களை  எம்மால்  கண்­டு­கொள்ள முடியும்.  என்னைப் பொறுத்­த­வ­ரையில் இது­தொ­டர்பில் மிகவும் இறுக்­க­மான ஏற்­பா­டுகள் அர­சி­ய­ல­மைப்பில் உள்­ளீர்க்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இது தொடர்பில் நான் தீவி­ர­மான நிலைப்­பா­டுடன் இருக்­கின்றேன்.

இந்த நாட்டின் ஆட்சி முறைமை தொடர்­பா­கவும் சில முரண்­பா­டுகள் தொடர்ந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றன. ஒற்­றை­யாட்சி, சமஷ்டி குறித்த விட­யங்கள், மிகவும் உணர்­வு­பூர்­வ­மாக இருக்­கின்ற ஒரு நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

அந்த விட­யத்­திலும் சில கருத்து வேறு­பா­டுகள் இருக்­கின்­றன. கட்சித் தலை­வர்கள் மத்­தியில் இவ்­வா­றான கருத்­து­வே­று­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

இந்த இரண்டு விட­யங்­க­ளையும் கடந்து  பிரி­ப­டாத  ஒரு நாடு போன்ற பதங்­களைப் பாவித்து  சமஷ்டி ஒற்­றை­யாட்சி என்ற பதங்­களைப் பயன்­ப­டுத்­தாமல் கூடு­த­லான அதி­கா­ரப்­ப­கிர்வை உறு­திப்­ப­டுத்த முடியும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

இருந்­தாலும் ஒற்­றை­யாட்சி என்ற பதத்தை நீக்க முடி­யாது என்ற  நிலைப்­பாட்டில் ஒரு சில தரப்­புக்கள் பிடி­வா­த­மாக இருக்­கின்­றன.  ஆனால் இந்த  பிரச்­சி­னையை மேலும் சர்ச்­சைக்­குள்­ளாக்கும் வகையில் சில சக்­திகள் உரு­வெ­டுத்­துள்­ளன.  வடக்கில் எழுக தமிழ் என்றும்  கிழக்கில் எழுச்சி என்றும்   தெற்­கிலோ சிங்­ஹலே என்றும்  வித­வி­த­மான  இன­வாத தீவி­ர­சக்­திகள்  தலை­தூக்க தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

இவர்கள்  வெவ்­வேறு  துரு­வங்­க­ளாக செயற்­ப­டு­வ­தாக தென்­பட்­டாலும்,  ஒரு­வ­ருக்­கொ­ருவர் உத­வு­கின்ற பாணி­யி­லேயே  செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இறு­தியில் இவர்கள் எல்­லோரும் எதி­ரியின் நண்­பர்கள் என்ற அடிப்­ப­டையில் செயற்­ப­டு­வதைப் போலத்தான் நாங்கள் காண்­கின்றோம். குறிப்­பாக மிகவும் பக்­கு­வ­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் கையா­ளப்­ப­ட­வேண்­டிய விட­யங்­களை பகி­ரங்­க­மாக போட்­டு­டைத்து  குழப்­பி­வி­டு­கின்ற  நில­வ­ரங்­களை   ஏற்­ப­டுத்தக் கூடாது.

அவ்­வாறு மிகவும் கவ­ன­மாக இந்த விட­யங்­களை நாங்கள் கையா­ள­வேண்­டி­யுள்­ளது.  இதே­போன்­றுதான்  வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்­பா­கவும் வேண்­டு­மென்று முஸ்லிம் மக்­களை தூண்­டி­விடும் வகை­யி­லான விப­ரீ­தக்­க­ருத்­துக்­களை ஒரு சில தரப்­புக்கள்  ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.

அதா­வது அர­சியல் ரீதியில் வங்­கு­ரோத்துக்கு வந்­து­விட்ட  ஒரு­சிலர்  இந்த விட­யங்­களை  தற்­போது தூக்கிப் பிடித்­துக்­கொண்டு திரி­கின்­றார்கள்.

 ஒன்­பது மாகா­ணங்கள் குறித்த விட­யத்தில் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வி­லுள்ள கட்சித் தலை­வர்கள் மத்­தியில் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. மாகா­ணங்கள் இணை­வது தொடர்­பான செயற்­பா­டுகள் அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­க­னவே நிபந்­த­னைக்­குட்­பட்­டவை.  எனவே பாரா­ளு­மன்­றத்தில் ஒரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டாமல் அவை சாத்­தி­ய­மா­காது. அதே­வேளை இரண்டு மாகா­ணங்­க­ளுக்­கி­டையில் ஒரு சில இணக்­கப்­பா­டு­க­ளோடு சில விட­யங்­களில் மட்டும் ஒத்­து­ழைப்­புடன்  செயற்­ப­டு­வது தொடர்­பிலும் பரி­சீ­லிக்­கலாம்.

ஆனால் வேண்­டு­மென்றே இந்த இணைவு சம்­பந்­த­மான விட­யங்­களை அத­னு­டைய சாத்­தி­யப்­பாடு தொடர்­பான தெளிவில்லாமல் ஒரு புரளியாக  சில தரப்பினர் சொந்த சுயலாப அரசியலுக்காக கையிலெடுத்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் வேண்டுமென்றே மௌனத்துடன் இருப்பதாகவும் ரகசிய உடன்பாடுகளுக்கு வந்துள்ளதாகவும் ஒரு சிலர் பேசித் திரிகின்றனர். அதாவது முன்னைய ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக இருந்த ஒரு சில அரசியல்வாதிகள் தூக்கி எறியப்பட்டு பின்கதவால் இந்த ஆட்சியுடன் இணைந்து கொண்டவர்கள், இன்னும் இணைந்துகொள்வதற்கு காத்துக்கொண்டிருப்பவர்கள், போன்றவர்களின் மேற்குறித்த விபரீத விளையாட்டு மிகவும் ஆபத்தானது.

இதில் நாங்கள் எல்லோரும்  கவனமாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
'எழுக தமிழ்' மற்றும் 'கிழக்கின் எழுச்சி' ஆகியவையும் 'சிங்ஹ லே' போன்ற இனவாத தீவி­ர­சக்­திகளே ! 'எழுக தமிழ்' மற்றும்  'கிழக்கின் எழுச்சி' ஆகியவையும் 'சிங்ஹ லே' போன்ற இனவாத தீவி­ர­சக்­திகளே ! Reviewed by Madawala News on 9/28/2016 11:20:00 AM Rating: 5