பழிவாங்கல் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்.



~அ(z)ஸ்ஹான் ஹனீபா~

பழிவாங்குதல் என்பது ஒரு மனிதன் இரத்தக் கொதிப்பின் காரணமாக  வேறு ஒருவரின்  மீதிருக்கும் தனது கோபத்தை வெளிப்படுத்தும் நிலையாகும் .

இறைவன் மனிதனை அழகிய இயற்கை குணங்களிலே படைத்திருக்கின்றபொழுது மனிதன் இறைவனின் வேதத்தை சரியாக அறியாததினாலும் கூடாத  கூட்டுச் சேர்க்கைகளினாலும் தமது இயற்கை குணங்களை இழந்து துஷ்டனாக சமூகத்தில் அடையாளப் படுத்தப்படுகிறான்.அந்தவகையில் தெளிவுபடுத்தப்படவேண்டிய ஒரு தீய குணமே பழிவாங்குதல் எனும் இத்தீய குணம் .

பழிவாங்குதல் எவ்வாறு நபியின் நடத்தைகளில் காணப்பட்டது என்று முதலில் நாம் கவனிப்போம்
، وَلَا انْتَقَمَ لِنَفْسِهِ مِنْ شَيْءٍ يُؤْتَى إِلَيْهِ، حَتَّى تُنْتَهَكَ حُرُمَاتُ اللهِ عَزَّ وَجَلَّ.

நபியைப் பற்றி அவர்களின் அருமைத் தோழர்கள் இவ்வாறு வர்ணிக்கின்றனர் " இறைவன் அவருக்கு கொடுத்த விடயங்களில் தமக்காக எப்பொழுதும் பழிவாங்கியது கிடையாது ஆனால் அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட விடயங்களில் சீர்குலைவு ஏற்பட்டால் நபியவர்கள் அவ்விடயங்களில் பழிவாங்குவார்கள்."
 இச்செய்தி எமக்குத் தெரிவிப்பது யாதெனில் இறைக்கடமைகள் சீர்குலைக்கப்படும்பொழுது அவற்றிற்காக பழிவாங்குவது இயலும் என்பதாகும்.

ஆனால் இன்று எமது பழிவாங்கல் எதனை நோக்கியதாக இருக்கின்றது ?
எம்மில் அதிகமானோர் சுய இலாபத்திற்காகவே  பழிவாங்கிக் கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம் , அதையும் விட விசித்திரம் ஒன்றெனில் பழிவாங்கப்படுபவன் ஒரு சபையிலோ அல்லது  ஒரு நிகழ்வின் பங்குதாரராக இருந்துவிட்டால் அவரை பழிவாங்கும் முகமாக அந்நிகழ்வை அல்லது அச்சபையை சீரழித்து குழப்புவதை இன்றைய சமூகத்தில் நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம் . தம்மோடு சம்பந்தப்படவனை பழிவாங்குவதை விட்டு விட்டு சம்பந்தம் இல்லாத எங்கோ உள்ளவனின் சபையை அல்லது அவனது காரியங்களை குழப்புவது நியாயம் ஆகுமா ???

மனிதனுக்கு இன்றியமையாத ஐந்து விடயங்கள் இருக்கின்றன அவற்றை பாதுகாக்க அவன் போராடலாம் எனினும் சம்பந்தமின்றி போராடுவது சண்டையிடுவது ஆறறிவு கொண்ட மனிதனுக்கு பொருத்தமற்ற செயல் என்பதில் எள்ளளவேனும் சந்தேகமில்லை !
பழிவாங்கும் நிலை மிருகங்களுக்கே அதிகம் காணப்படுகின்றது எனவே தான் ஒருவன் இவ்வாறான செயல்களை செய்கின்ற பொழுது அவனை மிருகங்களின் பெயர் கொண்டு அழைக்கிறோம்.

எனவே என்றும் இஸ்லாம் கூறும் இயற்கைக் குணமே மிகவும் சிறந்தது .இஸ்லாத்தைப் படித்து நல்லவர்களுடன் நட்புக்கொண்டு சிறந்த குணங்களோடு பழிவாங்கல் எனும் துற்குணத்தை வாழ்விலிருந்து அகற்றி சிறப்பாக வாழ முயற்சிப்போம்.

அன்பின் 
அ(z)ஸ்ஹான் ஹனீபா  
ஹுஸைனியாபுரம்-பாலாவி
பழிவாங்கல் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம். பழிவாங்கல் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம். Reviewed by Madawala News on 9/30/2016 03:58:00 PM Rating: 5