Ad Space Available here

கோத்தாபாய ராஜபக்ஷ தனி நபர்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை பலாத்­கா­ர­மாக எடுத்துக் கொண்டார்.(எம்.ஆர்.எம்.வஸீம்)

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பாக சிங்­கள மக்­களை தூண்டிவரும் விமல் வீர­வன்ஸ மகா­நா­யக்க தேரரின் பதிலால் மூக்­கு­டை­பட்­டுள்ளார் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத்­சாலி தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தைப் பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்­சி­களும் தங்கள் சம்­மே­ள­னத்தை வெற்­றி­க­ர­மாக முடித்­துக்­கொண்­டுள்­ளதால் அர­சாங்­கத்­துக்கு விரோ­த­மாக செயற்­படும் மஹிந்த அணி­யினர் செய்­வ­தற்கு ஒன்­று­மில்­லாமல் தற்­போது அமைக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக பொய் பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். அதன் ஓர் அங்­க­மாக விமல் வீர­வன்ச மல்­வத்த மகா­நா­யக்க தேரரை சந்­தித்து இது­தொ­டர்­பாக தெரி­வித்­துள்ளார். ஆனால் மகா­நா­யக்க தேரர் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக அறிந்­துள்­ள­மையால் விமல் வீர­வன்­சவின் குற்­றச்­சாட்­டுக்­களை அவர் கவ­னத்தில் எடுக்­க­வில்லை.

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மகா­நா­யக்க தேர­ரிடம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் அர­சி­ய­ல­மைப்பு மூலம் ஒரு­போதும் நாட்டை பிரிக்க இட­ம­ளிக்க மாட்டோம் என இரண்­டு­பேறும் உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும் தேரர் விமல் வீர­வன்­ச­விடம் தெரி­வித்­துள்ளார்.

இதன் மூலம் அர­சி­ய­ல­மைப்பை வைத்து சிங்­கள மக்­களை குழப்­பு­வ­தற்கே இவர்கள் மகா­நா­யக்க தேர­ரிடம் சென்­றுள்­ளனர். ஆனால் மகா­நா­யக்க தேரரின் பதில் மூலம் விமல் வீர­வன்ச மூக்­கு­டைக்­கப்­பட்­டுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசிய கட்­சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா­வுக்கு சென்­றதன் மூலம் அவர் கட்­சியை காட்­டிக்­கோ­டுத்­துள்ளார் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ் தெரி­வித்­துள்ளார். அத்­துடன் சுதந்­திர கட்சி ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் ஒப்­பந்தம் செய்­து­கொண்­டுள்­ள­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் அவ்­வாறு செய்­தி­ருக்­கக்­கூ­டாது எனவும் தெரி­வித்­துள்ளார். ஆனால் மஹிந்த ராஜ­பக்ஷ்தான் முத­லா­வ­தாக 2006ஆம் ஆண்டு ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் செய்­து­கொண்டார். அப்­போது கட்­சியை காட்­டிக்­கொ­டுப்­ப­தாக இவ­ருக்கு தோன்ற வில்­லையா?

இரண்டு பிர­தான கட்­சிகள் இணைந்து ஆட்சி செய்­வதால் நாட்­டுக்­குதான் நன்மை கிடைக்­கின்­றது. இதன் மூலம் அர­சியல் பழி­வாங்­கல்கள் இடம்­பெ­று­வ­தில்லை. கடந்த காலங்­களில் ஆட்­சிக்கு வரும் கட்சி அடுத்த கட்­சிக்­கா­ரர்­களை அர­சியல் பழி­வாங்கும் செயல் தொடர்ந்து இருந்து வந்­துள்­ளது.

ஆனால் இம்­முறை அவ்­வா­றான பழி­வாங்­கல்கள் இடம்­பெ­ற­வில்லை.
அத்­துடன் 1.3 டிரில்­லியன் கடனை அடைப்­ப­தற்கு வரி அதி­க­ரிப்பை மேற்­கொள்­ள­வேண்­டிய நிலை­மைக்கு அர­சாங்கம் தள்­ளப்­பட்­டுள்­ளது.

அதி­க­ரித்­துள்ள புதிய வரி குறு­கிய காலத்­துக்­கா­கவே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

ஆனால் மஹிந்த அர­சாங்­கத்தில் வரி அதி­க­ரிப்பு 20வீத­மாக இருந்­த­போது யாரும் ஆர்ப்­பாட்டம் செய்­ய­வில்லை. இது­தொ­டர்­பாக வாய்­தி­றக்­கவும் அச்­சப்­பட்­டனர். ஆனால் தற்­போது 11வீத­மாக இருந்த வரி 15வீத­மா­கவே அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அதுவும் குறு­கிய காலத்­துக்கே இது அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

இந்த நிலை­யிலும் இதற்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அந்­த­ள­வுக்கு இன்று ஜன­நா­யகம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது .

அதே­போன்று கோத்­த­பாய ராஜ­பக்ஷ இன்று அர­சாங்­கத்தை விமர்­சித்து வரு­கின்றார். ஆனால் அவர் அதி­கா­ரத்தில் இருக்­கும்­போது அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்து தனி நபர்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை பலாத்­கா­ர­மாக பெற்­றுக்­கொண்­டுள்ளார்.

சட்­ட­வி­ரோ­த­மாக யானைக்­குட்டி மற்றும் சுறா மீன் ஒன்றை அர­சாங்­கத்தின் செலவில் வளர்த்து வந்தார். அது தொடர்­பாக அர­சாங்கம் அவ­ருக்கு எதி­ராக எந்த சட்ட நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வில்லை. நல்­லாட்சி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததும் மஹிந்த குடும்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை ஒன்றும் இடம்பெறவில்லை.

ஜனாதிபதியும் பிரதமரும் மஹிந்த குடும்பத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவே மக்கள் சந்தேகிக்கின்றனர். எனவே அரசாங்கம் மஹிந்த குடும்பத்துடன் வைத்துக்கொண்டுள்ள உறவை முறித்துக்கொண்டு அவர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்களுக்கு வழக்கு தொடர்ந்து அவர்களை சட்டத்துக்கு முன்னால் நிறுத்தவேண்டும் என்றார்.

கோத்தாபாய ராஜபக்ஷ தனி நபர்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை பலாத்­கா­ர­மாக எடுத்துக் கொண்டார். கோத்தாபாய ராஜபக்ஷ  தனி நபர்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை பலாத்­கா­ர­மாக எடுத்துக் கொண்டார். Reviewed by Madawala News on 9/15/2016 11:03:00 AM Rating: 5